கிராமத்து ஸ்டைலில் ருசியான காளான் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

- Advertisement -

வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமுள்ள உணவுகளை சமைத்து கொடுப்பது என்பது மிகப்பெரிய பரீட்ச்சையாகவே இருக்கும். ஏனெனில் குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும் சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே சத்தான உணவுகள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுப்பதில்லை. எனவே குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது.

-விளம்பரம்-

அனைத்து வகையான காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும்.

- Advertisement -

காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் குழம்பு. காளான் அசைவ உணவுகளின் சுவையைக் கொடுப்பதால், மதிய வேளையில் இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பாராட்டு நிச்சயம் !!

Print
No ratings yet

கிராமத்து காளான் குழம்பு | Village Style Mushroom Curry Recipe In Tamil

வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமுள்ள உணவுகளை சமைத்து கொடுப்பது என்பது மிகப்பெரிய பரீட்ச்சையாகவே இருக்கும். ஏனெனில் குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும் சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே சத்தான உணவுகள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுப்பதில்லை. எனவே குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அனைத்து வகையான காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. காளான் அசைவ உணவுகளின் சுவையைக் கொடுப்பதால், மதிய வேளையில் இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பாராட்டு நிச்சயம் !!
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: mushroom curry
Yield: 4 People
Calories: 95kcal

Equipment

  • 1 வாணலி
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் காளான்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1/4 கப் நறுக்கிய தக்காளி
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை

அரைக்க

  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம் 
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 கிராம்பு
  • 6 சின்ன வெங்காயம்
  • 2 துண்டு தேங்காய்

செய்முறை

  • முதலில் காளானை கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு‌ மிக்ஸி ஜாரில் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி மசிந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நறுக்கி வைத்துள்ள காளான் துண்டுகளை சேர்த்து கலந்து விடவும்.
  • பின் மூடி வைத்து கொதிக்க வைக்கவும். குழம்பு கொதித்தும் நறுக்கி வைத்துள்ள கொத்த மல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான பாரம்பரிய கிராமத்து காளான் குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 95kcal | Carbohydrates: 6.3g | Protein: 7.5g | Fat: 1.2g | Sodium: 6mg | Potassium: 448mg | Fiber: 2.7g | Vitamin C: 2.59mg | Calcium: 18mg | Iron: 1.91mg

இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான காளான் சமோசா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இந்த மழைக்கு சூப்பராக இருக்கும்!