நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான். காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும். காளான் இரும்பு மற்றும் செம்பு சத்துக்களையும் அதிகம் கொண்டது. காளான் குழம்பு மிகவும் ருசியான சமைப்பதற்கு எளிமையான ஒன்று. எளிதாக கிடைக்கும் ஒரு பொருளாக காளான் உள்ளதால் இதனை அடிக்கடி சமைத்து ருசிக்க முடியும். சைவ பிரியர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளானும் ஒன்று. சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள், காளான் உடலுக்கும் நல்ல மருத்துவ பயனளிக்கிறது, குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது.
அதேபோல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் அசைவ உணவுகளுக்கு நிகராகவும் இருக்கும். காளான் வைத்து சுவையான மசாலா, கிரேவி, 65,மஞ்சூரியன் என்று பல விதங்களில் சேமித்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான சுவையில் காளான் வைத்து தொக்கு ரெசிபியை காண உள்ளோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் தொக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் சப்பாத்தி மட்டும் இல்லாமல் சாதத்துக்கு மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
காளான் தொக்கு | Mushroom Thokku Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 பாக்கெட் காளான்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 துண்டு இஞ்சி
- 4 பல் பூண்டு
- 1 பட்டை,கிராம்பு
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1/2 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- கடலை எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் காளானை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் பூண்டு, இஞ்சி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு மசிந்ததும், அத்துடன் எல்லா மசாலா பொருட்களும், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன் பின் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்க்காமல் பத்து நிமிடங்கள் மூடி வைத்து, மிதமான சூட்டில் வேக வைக்கவும். கடைசியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையாக காளான் தொக்கு தயார். இந்த காளான் தொக்கு சாதம், சப்பாத்தி, பரோட்டா போன்ற எல்லா உணவுடனும் மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சண்டே ஸ்பெஷலாக காளான் இறால் சில்லி கறி ஒருமுறை இப்படி செய்து கொடுங்கள்! தட்டு நிறைய சாதம் போட்டாலும் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!