Home அசைவம் புராட்டாசி முடிந்தது முதல் ரெசிபியாக மட்டன் 65 இனி இப்படி செஞ்சி பாருங்க!

புராட்டாசி முடிந்தது முதல் ரெசிபியாக மட்டன் 65 இனி இப்படி செஞ்சி பாருங்க!

பொதுவாக அசைவ பிரியர்கள் பலரும் சிக்கன் 65  விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் சிக்கன் 65 காட்டிலும் சுவையாகவும் அதே சமயம் ஆரோக்கியம்  என அனைத்து தரப்பினரும் உண்ணக்கூடிய மட்டனில் செய்யக்கூடிய சூப்பரான ஸ்னாக்ஸ் தான் மட்டன் 65. மட்டன் 65 ,மட்டன் கொண்டு செய்யப்படும் ஒரு உணவாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த அசைவ 65  எப்படி செய்வது என்று பார்ப்போம்

-விளம்பரம்-

ரொம்பவே சுவையான மட்டன் 65 , சிக்கன் 65  சுவையையும் மிஞ்சிவிடும் அளவிற்கு இருக்கம். ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும் இந்த மட்டனில், 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. . சிக்கன்  போன்றே இந்த மட்டன்  65 ருசியாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Print
No ratings yet

மட்டன் 65 | Mutton 65 Recipe In Tamil

ரொம்பவே சுவையான மட்டன் 65 , சிக்கன் 65  சுவையையும் மிஞ்சிவிடும்அளவிற்கு இருக்கம். ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது..உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும்தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையானபார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி உண்ணும்இந்த மட்டனில், 65 செய்வதற்கு ரொம்பவே சுலபமானது. . சிக்கன்  போன்றே இந்த மட்டன்  65 ருசியாக இருக்கும். இதனை வீட்டில் எப்படி செய்யலாம்என இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Mutton 65
Yield: 4
Calories: 143kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 200 கிராம்  எலும்பில்லாத மட்டன்
  • 3 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  • 2 டேபிள்ஸ்பூன் சோள மாவு
  • 2 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது
  • 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

  • மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி,தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா,குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்),
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள்,மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டுகெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்).
  • ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்,
  •  
    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்துஎடுக்கவும்,
  •  
    மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாரும் வரை பொரித்தால் போதும், மட்டன் 65 ரெடி.
  • நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும், காயாத எண்ணெயில்பொரிந்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும்.
  • அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும்,மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது.
     

Nutrition

Serving: 500g | Calories: 143kcal | Carbohydrates: 88g | Monounsaturated Fat: 5.34g | Cholesterol: 88mg | Potassium: 223mg | Iron: 1.26mg