- Advertisement -
அசைவ மக்களுக்கு மட்டன் மற்றும் சிக்கன் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் கறி முருங்கைக்காய் பொரியல் . எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த கத்தரிக்காய் முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. கறி , முருங்கைக்காய் சேர்த்து கறி முருங்கைக்காய் பொரியல் புதுவிதமான ஒரு ரெசிபி. மிக மிக எளிமையான முறையில் சுடச்சுட இந்த பொரியல் இருந்து விட்டால் போதும். ஒரு குண்டால் சாதத்தை சாப்பிட்டு விடலாம். வாங்க இந்த ரெசிபி யை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
-விளம்பரம்-
கறி முருங்கைக்காய் பொரியல் | Mutton Drumstick Curry
அசைவமக்களுக்கு மட்டன் மற்றும் சிக்கன் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவுதான் கறி முருங்கைக்காய் பொரியல் . எவ்வளவோ வகை வகையான காய்கறிகள் இருந்தாலும், இந்த கத்தரிக்காய் முருங்கைக்காயை அடித்துக் கொள்ள வேறு காம்பினேஷனே கிடையாது. கறி , முருங்கைக்காய் சேர்த்து கறி முருங்கைக்காய் பொரியல் புதுவிதமான ஒரு ரெசிபி. மிக மிக எளிமையான முறையில் சுடச்சுட இந்த பொரியல் இருந்து விட்டால் போதும். ஒரு குண்டால் சாதத்தை சாப்பிட்டு விடலாம். வாங்க இந்த ரெசிபி யை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்
Yield: 4
Calories: 37kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 400 கிராம் ஆட்டுக்கறி
- 2 முருங்கைக்காய்
- 20 கிராம் காய்ந்த மிளகாய்
- 30 கிராம் வெங்காயம்
- முக்கால் தேக்கரண்டி சீரகம்
- 3 துண்டுகள் தேங்காய்
- மஞ்சள் துண்டு சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- கறியைத் தேவையான அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். பின்னர்ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கறியைப் போட்டு வேக வைக்கவும்.
- முருங்கைக்காயைத் தேவையான அளவு துண்டுகளாக நறுக்கி கறியுடன் சேர்க்கவும். அதன்பின்னர் நறுக்கியவெங்காயத்தைச் சேர்க்கவும். மிளகாய்,மஞ்சள் துண்டு, உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து கறி பாதியளவு வெந்தவுடன் சேர்க்கவும்.
- கறி நன்றாக வெந்தவுடன் வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு சிவந்தவுடன் வெங்காயத்தையும் போட்டு நன்கு சிவந்ததும் கறியைக் கொட்டி மூடிவிட வேண்டும்.
- தேங்காயை திப்பியாக அரைத்து தாளித்த கறியில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கிவிடவும். அவ்வளவுதான்கறி முருங்கைக்காய் பொரியல் தயார். இதன் சுவையே தனிதான்.
Nutrition
Serving: 100g | Calories: 37kcal | Protein: 2g | Fat: 2g | Sodium: 42mg | Fiber: 3.2g | Calcium: 3mg
- Advertisement -