ருசியான ஆட்டு ஈரல் கிரேவி இப்படி ஒரு முறை வீட்டில் இப்படி சமைத்து பாருங்க! இதன் ருசிக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

- Advertisement -

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. அதிலும் ஆட்டின் ஈரலை சமைத்து சாப்பிடும் பொழுது நமது உடலில் உள்ள ஆட்டு ஈரல் பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஆட்டு ஈரல் வறுவலை எப்படி சுவையாக சமைப்பது என்பதனை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுவையான ஆட்டு ஈரல்  கிரேவி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.

-விளம்பரம்-

சைவ உணவை சாப்பிடுவதை விட அசைவ உணவுகளை சாப்பிடுவதில் தான் இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அசைவ உணவில் சேர்க்கப்படும் மசாலாக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. எனவே காய்கறிகளை ஒதுக்கிவிட்டு சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை விருப்பமாக சாப்பிடுகின்றனர்.

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அசைவத்தை மட்டன் ,சிக்கன் விட ஆட்டு ஈரல் அதிகமானது. அப்படி புரதச் சத்து அதிகம் நிறைந்த ஆட்டு ஈரலில் இப்படி சுவையான  ஈரல் கிரேவி செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் இதனை தட்டாமல் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும் பொழுது இது சைவம் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்க்கு இதன் சுவையும், மணமும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான உணவை எப்படி சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
3 from 2 votes

ஆட்டு ஈரல் கிரேவி | Mutton Liver Gravy Recipe In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் அசைவத்தை மட்டன் ,சிக்கன்விட ஆட்டு ஈரல் அதிகமானது. அப்படி புரதச் சத்து அதிகம் நிறைந்த ஆட்டு ஈரலில் இப்படிசுவையான  ஈரல் கிரேவி செய்து கொடுத்து பாருங்கள்.அனைவரும் இதனை தட்டாமல் சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும் பொழுது இது சைவம் என்பதைகண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவிற்க்கு இதன் சுவையும், மணமும் அருமையாக இருக்கும்.வாருங்கள் இந்த சுவையான உணவை எப்படி சமைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Mutton Liver Gravy
Yield: 4
Calories: 135kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பச்சை மிளகாய்
  • 300 கிராம் ஈரல்
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • கறிவேப்பிலை சிறிது
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

  • வாணலியை அடுப்பில் வைத்து தனியா, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து ஆரவைத்து பொடி செய்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
     
  • பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவுமு. தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும், ஈரல் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  • ஈரல் ஓரளவுக்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், கரம் மசாலா, அரைத்து வைத்த மசாலா, உப்பு சேர்த்து கிளறி வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி வேகவிடவும்.
  • ஈரல்நன்றாக வெந்து கிரேவி பதத்திற்கு வந்துவிடும். இப்போது, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  • சுவையான ஆட்டு ஈரல் கிரேவி ரெடி..!

Nutrition

Serving: 100g | Calories: 135kcal | Protein: 20.4g | Fat: 3.6g | Cholesterol: 302mg | Potassium: 258mg