காரசாரமான கிராமத்து மட்டன் மிளகு கிரேவி இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி கிரேவியும் காலியாகும்!

mutton gravy
- Advertisement -

உங்களுக்கு மட்டன் மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது காரசாரமான மட்டன் மிளகு கிரேவி இனி இது போன்று செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

-விளம்பரம்-

இந்த கிரேவி செய்து சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.

mutton gravy
Print
No ratings yet

மட்டன் மிளகு கிரேவி | Mutton Pepper Gravy Recipe In Tamil

உங்களுக்கு மட்டன் மிகவும் பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது காரசாரமான மட்டன் மிளகு கிரேவி இனி இது போன்று செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
இந்த கிரேவி செய்து சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time41 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: mutton peppar gravy, மட்டன் மிளகு கிரேவி
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • ¼ கிலோ மட்டன்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • புதினா சிறிதளவு
  • டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • ½ டீஸ்பூன் மிளகு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • இலை பாதி
  • டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 3 டீஸ்பூன் முதலில் எண்ணெய்

செய்முறை

  • முதலில் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறு க்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து தண்ணீரில் அலசிக் கொள்ளவும் . மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் அம்மியில் வை த்து ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி விழுதாக அ ரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து கறியை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 30 நிமிடம் வேக வைக்கவும். கறி வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல் உப்பு சேர்த்து குடிக்கலாம்.
  • அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு வெங்காயத்தின் நிறம் சற்று மாறும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அதில் புதினா மற்றும் நறுக்கின தக்காளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அதன் பிறகு வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கறியை போட்டு 2 நிமிடம் கிளறி விடவும்.
  • 2 நிமிடம் கழித்து அரைத்துவைத்திருக்கும் மிளகு, சீரகம், மற்றும் சோம்பு விழுதை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
  • பிறகு அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி விடவும். மசாலா வாசனை போகும் வரை பிரட்டவும்.
  • 2 நிமிடம் கழித்து நன்கு பிராட்டியதும் அதில் ¼ கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் 2 நிமிடம் பிரட்டி விடவும். தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக கரி வேக வைத்த தண்ணீரை கூட சேர்த்துக்கொள்ளலாம். பிறகு அதனை நன்கு கொதிக்க விடவும்.
  • கொதித்தவுடன் இடையில் கிளறி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் அடி பிடித்து விடும்.
  • 10 நிமிடம் கழித்து நன்கு வெந்து மசாலாக்கள் ஒன்றாக சேர்த்து கிரேவி பதம் வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.