ரோகன் ஜோஷ் என்பது பூண்டு, இஞ்சி மற்றும் நறுமண மசாலா (கிராம்பு, வளைகுடா இலைகள், ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை) கொண்ட குழம்புடன் மட்டன் சேர்த்து வெங்காயம் அல்லது தயிர் ஆகியவற்றைக் கொண்டு செய்ய படுவது. மட்டன் எனும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் இதயம் வலிமை பெறும் , மூளைக்கு நல்லது, இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு தான். திங்கள் முதல் சனி வரை வேலைக்கு சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே விடுமுறையில் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக வீட்டில் உள்ளனர். அவ்வகையில் அடுத்த முறை மட்டன் சமைப்பதாக இருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி மட்டன் ரோகன் ஜோஸ் செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.
இந்த சதைப்பற்றுள்ள கறியுடன் உங்கள் காலை அல்லது இரவு உணவு மேசையை கொண்டாடுங்கள். காஷ்மீரி சமையலறையிலிருந்து நேராக, இதோ ரோகன் ஜோஷ் ரெசிபி. இதில் இறைச்சியைக் கிளறி, ஏராளமான நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் சேர்த்து, தயிர் கலந்து மென்மையாகும் வரை சமைக்கவும். விருந்துகளில் பரிமாற ஒரு சுவையான உணவு! புதினா சட்னியுடன் இதை இணைக்கவும்.தேவையான பொருட்கள்.வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மட்டன் ரோகன் ஜோஸ் | Mutton Rogan Josh Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மட்டன்
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
- 1 டேபிள்ஸ்பூன் தயிர்
- 50 கிராம் சின்ன வெங்காயம்
- 2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 100 மில்லி அரைத்த தக்காளி விழுது
- 1 டேபிள்ஸ்பூன் முந்திரிப் பருப்பு விழுது
- 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
- 1 சிட்டிகை குங்குமப்பூ
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- 4 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக . வெட்டிக்கொள்ளவும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எண்ணெயில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்துகொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். அடுத்து அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்
- வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் அதில் மட்டன், தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கலவை நன்றாக வெந்ததும் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
- பின்னர் முந்திரி விழுதைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கலவையை நன்கு கலக்கிவிட்டு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.. 70 நிமிடங்கள் வரை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
- 5-10மில்லி வெண்ணீரில் குங்குமப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கி, அந்நீரை அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழையை தூவி இறக்கவும்.
- சூப்பரான மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி.