அசைவ மக்களுக்கு மட்டன் மிகவும் பிடிக்கும். ஆட்டிறைச்சி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கிறது. அத்தகைய உணவுகளில் ஒன்று மட்டன் பொடிமாஸ் . அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. அசைவ உணவான மட்டன், நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.
மேலும் மட்டன் தான் அதிக மக்களால் சாப்பிடப்படும் அசைவ உணவுப் பொருளும் கூட. இப்போதெல்லாம் சைட் டிஷ் வகைகளே ஏராளம் ஆக வந்துவிட்டது. அதிலும் இந்த மட்டன் வைத்து செய்யும் ரெசிபிகள் பட்டியல் மிகவும் பெரியது. அதே நேரத்தில் மட்டன் நல்ல ஒரு சுவையுடனும் இருக்கிறது. சுவை மிகுந்த இந்த மட்டன் வைத்து ஒரு அருமையான பொடிமாஸ் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
மட்டன் பொடிமாஸ் | Mutton Scramble Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ மட்டன்
- 1 பெரிய வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/2 கப் பொட்டுக்கடலை
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் கசகசா
- 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
- 1 டேபிள்ஸ்பூன் மல்லிதூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
- உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:
- எண்ணெய் தேவைக்கேற்ப
- 4 பட்டை
- 6 கிராம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- கறியை நன்கு கழுவிவிட்டு குக்கரில் சிறிதளவு மஞ்சள் தூள் , கறி மூழ்கும் வரை தண்ணீர் கறி மூழ்கும்வரை கறியின் தன்மைக்கு ஏற்ற வாறு விசில் விட்டு சேர்த்து வேக வைக்கவும்.
- வாணலியை சூடாக்கி அதில் சோம்பு போட்டு சிவந்ததும் அத்துடன் பொட்டுக்கடலை, கசகசா சேர்த்து லேசாக வதக்கி இதை மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி வைக்கவும்.
- வெந்தகறியை மிக்ஸியில் போட்டு லேசாக ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். உதிர்த்த கறியில் பொட்டுக்கடலை பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
- அந்த கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒன்றாக பிசையவும். வாணலியை சூடாக்கி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு வெடித்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதில்பொடிமாஸ் கலவையை சேர்த்து நன்கு வதக்கி சிவந்து முறுவலாகும் வரை வைத்து இறக்கவும். சுவையான மட்டன் பொடிமாஸ் தயார். இந்த பொடிமாஸில் எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட சுவைக்கூடும்.