- Advertisement -
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த சுவையான மட்டன் சேமியாஇந்த பக்குவத்தில் சரியாக செய்து பாருங்கள். மட்டன் சேமியா பொதுவா நிறைய தாய்மார்கள் வேலை பளுவை குறைக்க சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்.
-விளம்பரம்-
இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் சேமியா பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
குழந்தைகளுக்கும் சேமியானா ரொம்ப பிடிக்கும். அதனால சத்தமில்லாம சாப்ட்ருவாங்க. கொஞ்சம் ஸ்பெஷலா மட்டன் சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுங்க. உங்களுக்கும் ஈஸி, அவங்களும் குஷியா சாப்பிடுவாங்க!
மட்டன் சேமியா | Mutton Semiya Recipe in Tamil
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த சுவையான மட்டன் சேமியாஇந்த பக்குவத்தில் சரியாக செய்து பாருங்கள். மட்டன் சேமியா பொதுவா நிறைய தாய்மார்கள் வேலை பளுவை குறைக்க சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்கும் சேமியானா ரொம்ப பிடிக்கும். அதனால சத்தமில்லாம சாப்ட்ருவாங்க. கொஞ்சம் ஸ்பெஷலா மட்டன் சேமியா செய்து குழந்தைகளுக்குக் கொடுங்க. உங்களுக்கும் ஈஸி, அவங்களும் குஷியா சாப்பிடுவாங்க.
Yield: 4 People
Calories: 294kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 பாக்கெட் சேமியா
- 150 கிராம் மட்டன் (கொத்தியது)
- 2 தக்காளி
- 8 இலைகள் புதினா
- கொத்தமல்லிதழை சிறிதளவு
- 1/ டீஸ்பூன் இஞ்சு பூண்டு விழுது
- 1 tbsp தனியா தூள்
- 1 tbsp மிளகாய் தூள்
- கேசரி பவுடர் சிறிதளவு
- 50 கிராம் நெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 வெங்காயம்
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1/ டீஸ்பூன் கரம் மசாலா பவுடர்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கவும்.
- தக்காளியையும் நறுக்கி வைக்கவும்.
- புதினா கொத்தமல்லித்தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
- கறியை தண்ணீரில் சுத்தம் செய்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து சிவக்க தாளிக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாசனை போனவுடன் கறி, தனியாதூள், மிளகாய் தூள், கேசரி பவுடர், கரம் மசாலா பவுடர் போட்டு வதக்கவும்.
- 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். உப்பு சேர்க்கவும். மேலும் 1 கிளாஸ் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.
- ஏனென்றால் ஒவ்வொரு சேமியா சீக்கிரம் வெந்துவிடும் ஆனால் சில சேமியாவிற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும்.
- தண்ணீர் வற்றியதும் மூடி போட்டு மேலே கனமான சாமான் வைத்து சிம்மில் வைக்கவும்.
- 5 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.
Nutrition
Serving: 550g | Calories: 294kcal | Protein: 25g | Fat: 21g | Saturated Fat: 9g | Cholesterol: 97mg | Sodium: 72mg | Potassium: 310mg | Iron: 2.1mg