- Prep
- 15 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner, LUNCH
சேமியா வைத்து செய்யப்படும் கேசரி சேமியா லட்டு இதுபோன்று பல செய்யலாம் ஆனால் சேமியா வைத்து அனைவரும் விரும்பக்கூடிய உணவுகளில் ஒன்றான பிரியாணி செய்ய முடியுமா செய்து பார்ப்போம் வாருங்கள்.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கேரளா பச்சை
இதையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற சுவையான தயிர் சேமியா செய்வது எப்படி ?
சேமியா பிரியாணி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த சேமியா பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
சேமியா பிரியாணி செய்ய முதலில் ஒரு நான் ஸ்டிக் பேனில் எண்ணெய், 1டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து சிறிது வதக்கி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, புதினா சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இதில் வேக வைத்த கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் சேமியா சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு பங்கு கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.
மூடி சிம்மில் வைத்து வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும். சேமியா வெந்தவுடன் நெய், முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கவும். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.






