Home அசைவம் கிராமத்து ஸ்டைல் ருசியான மட்டன் உப்புக்கண்டம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கிராமத்து ஸ்டைல் ருசியான மட்டன் உப்புக்கண்டம் இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இப்பதான் எல்லாரும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டு ரொம்ப பாஸ்ட்டா இருக்கும் ஆனா அந்த காலத்துல இருந்தவர்கள் எல்லாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு அமைதியான வாழ்க்கையை ஆர்ப்பாட்டமே இல்லாம வாழ்ந்தாங்க எப்பவுமே அந்த காலம் இப்ப நினைச்சாலும் பெஸ்ட் அப்படின்னு தான் சொல்ல அந்த காலத்துல வாழ்ந்தவங்க செய்கிற சாப்பாடு எல்லாமே அவ்வளவு ஆரோக்கியமானதா இருக்கும்.

-விளம்பரம்-

எல்லாத்தையும் சேமிச்சு வச்சு எதையுமே வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க அந்த வகையில் மட்டன் எப்பயாவது ஒரு தடவை தான் அவர்களுக்கு கிடைக்கும் அதை ரொம்ப நாளைக்கு சேமிச்சு வைக்கணும் அப்படின்னு அந்த மட்டன்ல உப்பு கண்டம் செய்றத வழக்கமா வச்சிருப்பாங்க இந்த உப்பு கண்டம் செய்ததோட காரணமே பொருட்களை வீணாக்கக்கூடாது சேமிச்சு வைக்கணும் அப்படின்றதுக்கான ஒரு காரணம் தான்.

இந்த உப்புக்கண்டத்தை எண்ணெயில் போட்டு பொரிச்சு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா செம டேஸ்டா இருக்கும் அதைவிட இந்த உப்பு கண்டத்தை வைத்து குழம்பு வச்சாலும் குழம்பும் ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும். இந்த உப்பு கண்டத்த இப்ப இருக்குற குழந்தைகள் எல்லாம் சாப்பிட்டு பார்த்திருக்க மாட்டாங்க. அவங்க எல்லாரும் இந்த உப்பு கண்டம் சாப்பிட்டு பார்த்தால் அதனுடைய டேஸ்டா உங்களுக்கு கண்டிப்பா பிடிச்சு போயிடும் அதனால ஒரு தடவை உங்க வீட்டுல மட்டன் அதிகமா எடுத்துட்டீங்கன்னா எப்பவும் ஒரே மாதிரியான உணவுகளை செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் மட்டன் எடுத்து இந்த மாதிரி உப்பு கண்டம் போட்டு வச்சுக்கிட்டீங்கன்னா பியூச்சர்ல உங்களுக்கு மட்டன் சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா டக்குனு இதை எடுத்து செஞ்சு சாப்பிடலாம் அருமையான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு ரொம்ப சூப்பரா இருக்கும்.

 அதே நேரத்துல இது ஆரோக்கியமானது கூட. பொதுவா முஸ்லிம் வீடுகள்ல கறி அதிகமா வாங்கிட்டா தோரணமாக கட்டி தொங்கவிட்டு நாலஞ்சு நாள் காயவெச்சு எடுத்து சேமிப்பாங்க. அவங்க மட்டும் இல்லாம யார் வேண்டுமானாலும் இந்த உப்பு கண்டம் செஞ்சு வச்சுக்கலாம் டேஸ்ட் அருமையாவே இருக்கும். நம்ம வீட்ல இருக்குற சில பொருட்களை வைத்து இந்த உப்பு கண்டம் செஞ்சு முடிச்சிடலாம் ரொம்பவே எளிமையான முறையில் சீக்கிரம் செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த உப்பு கண்டம் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4.50 from 2 votes

மட்டன் உப்புக்கண்டம் | Mutton Uppu Kandam Recipe In Tamil

உப்புக்கண்டத்தை எண்ணெயில் போட்டு பொரிச்சு சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா செம டேஸ்டா இருக்கும் அதைவிடஇந்த உப்பு கண்டத்தை வைத்து குழம்பு வச்சாலும் குழம்பும் ரொம்பவே டேஸ்ட்டா இருக்கும்.இந்த உப்பு கண்டத்த இப்ப இருக்குற குழந்தைகள் எல்லாம் சாப்பிட்டு பார்த்திருக்க மாட்டாங்க.அவங்க எல்லாரும் இந்த உப்பு கண்டம் சாப்பிட்டு பார்த்தால் அதனுடைய டேஸ்டா உங்களுக்குகண்டிப்பா பிடிச்சு போயிடும் அதனால ஒரு தடவை உங்க வீட்டுல மட்டன் அதிகமா எடுத்துட்டீங்கன்னாஎப்பவும் ஒரே மாதிரியான உணவுகளை செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் மட்டன் எடுத்து இந்த மாதிரிஉப்பு கண்டம் போட்டு வச்சுக்கிட்டீங்கன்னா பியூச்சர்ல உங்களுக்கு மட்டன் சாப்பிடணும்போல இருந்துச்சுன்னா டக்குனு இதை எடுத்து செஞ்சு சாப்பிடலாம் அருமையான டேஸ்ட்ல சாப்பிடுவதற்குரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Uppu kandam
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 அகல பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மட்டன்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 8 பல் பூண்டு
  • 10 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
  • மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்த அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • நன்கு கலந்து வைத்துள்ள மட்டனை ஒரு நூலில் கோர்த்து வீட்டில் மொட்டை மாடியில் அல்லது வெயில் படும்இடத்திலும் வைத்து காய வைக்கவும்
  • வெயில் வருவதைப் பொறுத்து மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • நாம் இதை டப்பாவில் போட்டு அடைத்து வைப்பதால் நன்றாக காயவில்லையெனில் கண்டிப்பாக உப்புக்கண்டம்கெட்டுப் போய்விடும்.
  • இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.
  • இந்த உப்புகண்டத்தை வைத்து நாம் குழம்பும் வைக்கலாம் இல்லையெனில் தேவைப்படும் பொழுது எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சாப்பிட்டால் அருமையான சுவையில் இருக்கும்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் செட்டிநாடு மட்டன் எலும்பு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!

-விளம்பரம்-