மைசூர் என்றவுடன் நாம் அனைவருக்கும் உடனே நினைவிற்கு வருவது மைசூர் அரண்மனை, மைசூர் சந்தனம் போன்றவை தான். அதே போன்று மைசூரில் பிரசித்தி பெற்ற உணவுகள் என்றால் மைசூர் பாக், மைசூர் மதூர் வடை. அந்த வரிசையில் அடுத்த படியாக மைசூர் சட்னியும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு எனலாம். கர்நாடகத்தில் கூர்க், தென் கர்நாடகம், மங்களூரு பகுதிகளில் தனித்துவமான சமையல் முறைகள் உள்ளன. இதில் மைசூரு காரச்சட்னி மிகவும் பிரபலமாகும். மைசூர் சட்னி கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியவற்றில் மிகவும் பிரபலமான சட்னி வகை. இது காரசாரமான சுவை கொண்டது. பூண்டு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை கொண்டு மசாலா அரைத்து செய்வதால் மைசூர் சட்னி சுவையும் மணமும் அபாரமாக இருக்கும். இந்தச் சட்னி, இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன். செய்வதும் சுலபம். இட்லி தோசைக்கு நாம் எப்போதும் அரைக்கும் தேங்காய், வேர்க்கடலை சட்னி போல் அல்லாது இந்த வித்தியாசமான ரொம்பவே ருசியான மைசூர் சட்னியை ஒரு முறை செஞ்சு கொடுத்துப் பாருங்க. இனி இட்லி தோசை செஞ்சாலே இந்த சட்னியை தான் செய்வீங்க.
பொதுவாக பெரும்பாலானோரின் வீடுகளில் இட்லி, தோசை, உப்புமா போன்ற உணவுகளே காலை உணவாக தயாரிக்கப்படுகின்றன. இவைக்கு தொட்டுக்கொள்ள ஒரெ மாதிரியான சட்னி, சாம்பார் சாப்பிட சில நேரம் சலிப்பாக இருக்கும். அப்போது புதுமாதிரியான ஏதேனும் உணவிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி இட்லி, தோசைக்கு மாற்றாக ஒரு காலை உணவை சாப்பிட விரும்புபவர்கள் மைசூர் கார சட்னி முயற்சிக்கலாம். நிச்சயம் இது உங்களுக்கு பிடித்தமான ஒரு நல்ல சாய்சாக இருக்கும். இந்த மைசூர் சட்னி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். அதோடு இதுவரை நீங்கள் சுவைத்திராத ருசியில் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். இதன் சுவையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். வாருங்கள்! ருசியான மைசூர் சட்னி மிக எளிமையாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மைசூர் சட்னி | Mysore Chatney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்
- 1 பெரிய வெங்காயம்
- 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1/4 கப் தேங்காய்
- 6 பல் பூண்டு
- 4 காஷ்மீரி மிளகாய்
- 8 வர மிளகாய்
- 1 துண்டு புளி
- உப்பு தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- நல்லெண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெங்காயத்தை தோல் உரித்து சற்று பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- பின் சூடான தண்ணீரில் காஷ்மீரி மிளகாய், சிகப்பு மிளகாய் மற்றும் புளியை ஊற வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எள்ளை சேர்த்து லேசாக வறுக்கவும்.
- அதன்பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் தேங்காய், பூண்டு, கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
- இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய், பொட்டுக்கடலை, ஊறவைத்த புளி, மிளகாய், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
- பின் அரைத்ததை ஒரு பவுளுக்கு மாற்றவும். அவ்வளவுதான் வித்தியாசமான, சுவையான மைசூர் சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மணக்க மணக்க ஸ்பெஷலான மைசூர் ரசம் மசாலா அரைத்துப் போட்டு ரசம் வைத்தால், இதோட வாசம் அனைவரது பசியை தூண்டும்!