மணக்க மணக்க ஸ்பெஷலான மைசூர் ரசம் மசாலா அரைத்துப் போட்டு ரசம் வைத்தால், இதோட வாசம் அனைவரது பசியை தூண்டும்!

- Advertisement -

சமையலறையில் ரசத்தை கூட்டி வைக்கும்போதே அப்படியே வாசம் வர வேண்டும். அப்போதுதான் அந்த ரசம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். . மணக்க மணக்க சூப்பரான ஒரு மைசூர் ரசம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். ஒவ்வொரு வீட்டிலும் ரசம் வைப்பதில் வித்தியாசம் தெரியும். ஒவ்வொரு வீட்டு ரசத்திலும் நிச்சயமாக ஒவ்வொரு ருசி இருக்கும்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க போவது ஒரு ஸ்பெஷல் மைசூர் ரசம் ரெசிபி. இதற்கான மசாலா அரவையை நாமே வறுத்து அரைக்க போகின்றோம். அந்த மசாலா தான் இந்த ரசத்துக்கு ஸ்பெஷல்.சூப்பரான மைசூர் ரசம்! ஒருமுறை இப்படி வச்சு பாருங்க! இந்த ரசத்தை யாருமே வேணாம்னு சொல்ல மாட்டாங்க!

- Advertisement -

ரசம் என்று சொன்னாலே சில பேருக்கு பிடிக்கும், சில பேருக்கு பிடிக்காது. அந்த வரிசையில், இந்த மைசூர் ரசத்தை உங்கள் வீட்டில் வைத்தால், கட்டாயம் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையான மைசூர் ரசத்தை, நம் வீட்டிலேயே மணக்க மணக்க எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ரசம் நாம வைக்கிற ரசம் மாதிரி இல்லங்க! கொஞ்சம் வித்தியாசமானது. எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Print
4.25 from 4 votes

மைசூர் ரசம் | Mysore Rasam Recipe In Tamil

ரசம் என்று சொன்னாலே சில பேருக்கு பிடிக்கும்,சில பேருக்கு பிடிக்காது. அந்த வரிசையில், இந்த மைசூர் ரசத்தை உங்கள் வீட்டில் வைத்தால்,கட்டாயம் யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு சுவையான மைசூர் ரசத்தை,நம் வீட்டிலேயே மணக்க மணக்க எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த ரசம் நாம வைக்கிற ரசம் மாதிரி இல்லங்க! கொஞ்சம் வித்தியாசமானது.எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Mysore Rasam
Yield: 4
Calories: 306kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 வரமிளகாயை
  • 3 ஸ்பூன் வரமல்லி
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • புளி எலுமிச்சைப்பழ அளவு
  • 2 தக்காளி
  • 50 கிராம் வேகவைத்த துவரம் பருப்பை
  • கொத்தமல்லி தழை சிறிது
  • 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • கடுகு தாளிக்க
  • சீரகம் தாளிக்க
  • கறிவேப்பிலை தாளிக்க
  • பெருங்காயம் தாளிக்க
  • வரமிளகாய் தாளிக்க

செய்முறை

  • முதலில் மசாலா பொருட்களை அரைத்து வைத்துக்கொள்ளலாம் ஒரு தடிமனான கடாயில் 6 வரமிளகாயை போட்டு சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.நிறம் கருப்பு நிறமாக மாற கூடாது. அதை எடுத்து தனியாக பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு,அதே கடாயில் வரமல்லி – 3 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், வெந்தயம் –1 ஸ்பூன், பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, இவைகளை ஒன்றாக சேர்த்து,எண்ணெய் ஊற்றாமல், வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.
  • இந்த பொருட்களெல்லாம் ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவேவறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொருட்களை எல்லாம், நன்றாக ஆற வைத்து, வறுத்தமிளகாயோடு, இந்த மசாலாப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.இந்த மசாலா பொருட்களை, ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.எப்போது ரசம் வைத்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அடுத்ததாக அதே கடாயில் ஒரு எலுமிச்சைப்பழ அளவுபுளிக்கரைசலை கரைத்து ஊற்றி, 2 பழுத்த தக்காளிகளை உங்கள் கைகளால் பிசைந்து, புளிக்கரைசலோடுசேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 7 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.
  • தக்காளியின் பச்சை வாடையும், புளியின் பச்சைவாடையும், போகும் அளவிற்கு கொதிக்கவிட வேண்டும். அடுத்ததாக, 50 கிராம் அளவு வேகவைத்ததுவரம் பருப்பை கடாயில் உள்ள புளி, தக்காளி கரைசலோடு சேர்த்து, ரசத்திற்கு தேவையானதண்ணீரையும் ஊற்றி(1லிட்டர் தண்ணீர்), மூன்று நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • இறுதியாக, நீங்கள் அரைத்து வைத்திருக்கும்மசாலா பொடியில் இருந்து, 2 டேபிள்ஸ்பூன் அளவு பொடியை, ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு,ஒரு குழிக்கரண்டி, அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, மசாலாவை ரசத்தில் ஊற்றி, விட வேண்டும்.
  • இந்த மசாலா பொடியை கரைத்து ஊற்றிய பின்பு,ரசம் 3 நிமிடங்கள் கொதித்த பின்பு, அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தழையை தூவி விடுங்கள்.இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியில், ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம்,கறிவேப்பிலை, பெருங்காயம், வரமிளகாய், தாளித்து ரசத்தில் கொட்டி விட்டால்,
  • மணக்க மணக்க மைசூர் ரசம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 2.7g | Sodium: 11.7mg | Fiber: 4.7g