- Advertisement -
அசைவ பிரியர்களின் ஃபேவரெட் லிஸ்டில் மீன் குழம்புக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் இன்று நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இந்த நெல்லை மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கக்கூடும். நீங்களும் இந்த மீன் குழம்பை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள் அனைவரும் மிகவும் விரும்பி
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் :மீன்டும் மீன்டும் சாப்பிட தோன்றும் காரசாரமான காடை 65 செய்வது எப்படி ?
- Advertisement -
சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு தாறுமாறான சுவையில் இந்த மீன் குழம்பு இருக்கும். அதனால் இன்று இந்த நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
நெல்லை மீன் குழம்பு | Nellai Fish Curry Recipe In Tamil
அசைவ பிரியர்களின் ஃபேவரெட் லிஸ்டில் மீன் குழம்புக்கு எப்பொழுதுமே தனி இடம் உண்டு. அந்த வகையில் இன்று நெல்லை மீன் குழம்பு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இந்த நெல்லை மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கக்கூடும். நீங்களும் இந்த குழம்பை ஒரு முறை ட்ரை பண்ணுங்க வீட்டில் இருக்கும் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
- மிக்சி
தேவையான பொருட்கள்
- ½ கிலோ குழம்பு மீன்
- 1 மூடி தேங்காய்
- 50 கிராம் சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் மல்லி தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவைக்கேற்ப
- புளி சிறிதளவு
- 1 ஸ்பூன் மிளகு தூள்
- ஸ்பூன் சீரகம்
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும். பிறகு மீனை சுத்தம் செய்துகொள்ளவும்.
- மிக்சியில் தேங்காய், மிளகு, சீரகம், 2 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மீதி வெங்காயம் சேர்த்து வதக்கவும், அதனுடன் தூள்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளி, புளிக்கரைசல், அரைத்த தேங்காய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்த பிறகு மீன்களை போடவும். மீன் வெந்து குழம்பு கெட்டியானதும், இறக்கி வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை போட்டு மூடி விட்டால் குழம்பு காமகமனு இருக்கும், சுவையாகவும் இருக்கும்.
Nutrition
Carbohydrates: 6.1g | Fat: 15g | Saturated Fat: 2.1g | Cholesterol: 109mg | Sodium: 745mg | Potassium: 711mg | Vitamin A: 18IU | Vitamin C: 11mg | Calcium: 8mg