பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறைந்த விலையில் நிறைய ஊட்ச்சத்துகளை கொண்டது இந்தப் பழம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய பழம். எளிதாக கிடைக்க கூடிய பழம். வாழைப்பழத்தை தோல் உரித்து அப்படியே சாப்பிடலாம். இருப்பினும் இதை வைத்து சுவையான ரெசிபிகளும் செய்து சாப்பிடலாம். அந்தவகையில் நேந்திரம் வாழைப்பழ பாயாசம் செய்வது குறித்து பார்க்கலாம்.
நேந்திரம் பழம், வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் கொண்ட சுவையான இனிப்பு. விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு சுலபமாக செய்யக்கூடிய பாயாசம். இந்த பாயாசம் கேரளாவில் பிரபலமான இனிப்பு. கேரளா மற்றும் நாகர்கோவிலில் நேந்திரம் பழம் பெரும்பாலும் இனிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
நேந்திர வாழைப்பழ பாயாசம் | Nendra Pazha Paayasam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 பழுத்த நேந்திரம் பழம்
- 150 கிராம் வெல்லம்
- 1 கப் தேங்காய் துருவியது
- 10 முந்திரி
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
- 3 டீஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் நேந்திரம் பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி நறுக்கி வைத்த நேந்திர பழ துண்டுகளை போட்டுவதக்கவும்.
- சிறிது வெந்து வந்ததும் கரண்டியால் மசித்து வெல்லக் கரைசலை அதில் ஊற்றவும். ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு அதன் பின் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
- வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சூடான சுவையான நேந்திர பழ பாயாசம் தயார்.