கறி குழம்பு ஸ்டைலில் காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் உணவுகளில் உருளைக்கிழங்கும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்கிழங்கு பொரியலை கட்டாயம் விரும்பி உண்பார்கள். குறிப்பாக குழந்தைகள். இன்று இங்கு நாம் காண இருப்பது நாம் வழக்கமாக செய்யும் குழம்புகளிலிருந்து சிறு சிறு மாற்றங்களோடு செய்யப்படும் ஒரு வித்தியாசமான உருளைக்கிழங்கு‌ குழம்பு. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து அலுத்துப் போய்விட்டதா? அப்படியானால் ஒரு நாள் இந்த ரெசிபியை முயற்சி செய்யுங்கள். அதுவும் அசைவ ஸ்டைல் உருளைக்கிழங்கு குழம்பு செய்யுங்கள்.

-விளம்பரம்-

இந்த அசைவ ஸ்டைல் உருளைக்கிழங்கு குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த உருளை கிழங்கு குழம்பு செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடித்தமான ஒரு கிழங்கு வகையாக இருருப்பது உருளைக்கிழங்கு தான். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட இந்த உருளைக்கிழங்கு குழம்பு சூப்பராக இருக்கும். இந்த சூப்பர் உருளைக்கிழங்கு குழம்பு, பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும். இதை புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
3 from 1 vote

உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு | Non veg Style Potato Gravy Recipe In Tamil

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து அலுத்துப் போய்விட்டதா? அப்படியானால் ஒரு நாள் இந்த ரெசிபியை முயற்சி செய்யுங்கள். அதுவும் அசைவ ஸ்டைல் உருளைக்கிழங்கு குழம்பு செய்யுங்கள். இந்த அசைவ ஸ்டைல் உருளைக்கிழங்கு குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என் இது மூன்றையும் மாற்றி மாற்றி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் குழம்பு வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த உருளை கிழங்கு குழம்பு செய்து பாருங்கள். இது புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Non Veg Style Potato Gravy
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 4 உருளைக்கிழங்கு

அரைக்க :

  • 1 பெரிய வெங்காயம்
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1 கிராம்பு, பட்டை
  • 4 மிளகாய் வற்றல்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 கொட்டை புளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக் கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து தோல் உரித்து, நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கசகசா, கிராம்பு, தேங்காய் துருவல், வற்றல், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பின் இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து புளி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • பின்னர் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கினால் உருளைக் கிழங்கு அசைவக்குழம்பு தயார்.
  • இந்த உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும்.

Nutrition

Serving: 450g | Calories: 164kcal | Carbohydrates: 37g | Protein: 4.6g | Fat: 3.5g | Sodium: 4mg | Potassium: 620mg | Fiber: 4g | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 4.1mg

இதனையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்‌ இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!