கேரளா ஸ்டைல் டீக்கடை வெங்காய வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

-விளம்பரம்-

டீக்கடைகளில் ருசிக்கும் வடை போல வேறு எந்த வடையும் ருசியை கொடுப்பதே இல்லை. எத்தனை பிரயத்தனம்பட்டு வீட்டில் செய்தாலும் அந்த வடைகள் டீக்கடைகளில் உண்ணும் வடையின் சுவைக்கு ஈடாகவே ஆகாது. அப்படி சுவையான வடைகளை எப்படி செய்கிறார்கள்? நாம் இப்பொழுது கேரளா ஸ்டைலில் டீக்கடையில் செய்யப்படும் வெங்காய வடை எப்படி செய்யலாம் என்பதை பார்க்க இருக்கிறோம். எப்பொழுதாவது புதிதாக ஏதாவது மாலை நேர சிற்றுண்டி செய்ய வேண்டும் என்று தோன்றும் பொழுதோ? என்ன செய்வதே என்று தெரியாமல் குழப்பமாக உள்ள பொழுது கூட இந்த வடையை சுலபமாக வீட்டில் பொருட்களை வைத்தே செய்யலாம்.

- Advertisement -

அருமையான சுவையுடைய வெங்காய வடையை செய்து கொடுத்தோமானால் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். எங்காவது வெளியில் சென்று அலுத்து வரும்பொழுது வரும் வழிகளில் டீக்கடைகளை பார்த்தால் அங்கு இருக்கும் வடைகள், சம்சாக்கள் மீதும் நமக்கு இருக்கும் ஆசை அதிகமாகும். அப்படி ஒரு டீயையும் ஒரு வடையும் வாங்கி சாப்பிட்டு விட்டு நாம் வீட்டுக்கு வரும் பொழுது பசி கூட மறந்து போய்விடும். அத்தனை சுவையோடு இருக்கக்கூடிய அந்த வடைகள் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த வெங்காய வடையை எப்படி செய்வது என்பது தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த வெங்காய வடையை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆக பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்பலாம். மிகவும் சுலபமாக பத்து பதினைந்து நிமிடங்களில் இந்த வெங்காயம் வடையை செய்துவிடலாம். இதற்கு எந்த மாவும் அரைக்க தேவையில்லை ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை சுலபமாக எடுத்து கலந்து உடனடியாகவே இந்த வடையை செய்து முடித்து விடலாம். நேரம் மிக மிகக் குறைவு செய்வதற்கு ருசியோ பல மடங்கு அதிகம்.

ஒரு உணவின் ருசி என்பது நம் மனதை நிறைக்க வேண்டும் அப்பொழுதுதான் ஒரு உணவை உண்ணுவதற்கான திருப்தி கிடைக்கும். இந்த வடைகளை உண்ணும் பொழுது மனம் திருப்தி அடைந்து நம் வயிறும் இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே திருப்தி அடையும். வாருங்கள் இந்த சுவையான டீக்கடை வெங்காய வடை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-
Print
4.75 from 4 votes

வெங்காய வடை | Onion Vada Recipe In Tamil

டீக்கடைகளில் ருசிக்கும் வடை போல வேறு எந்த வடையும் ருசியை கொடுப்பதே இல்லை. எத்தனை பிரயத்தனம்பட்டு  வீட்டில் செய்தாலும் அந்த வடைகள் டீக்கடைகளில் உண்ணும் வடையின் சுவைக்கு ஈடாகவே ஆகாது. அப்படி சுவையான வடைகளை எப்படி செய்கிறார்கள்? நாம் இப்பொழுது கேரளா ஸ்டைலில் டீக்கடையில் செய்யப்படும் வெங்காய வடை எப்படி செய்யலாம் என்பதை பார்க்க இருக்கிறோம். எப்பொழுதாவது  புதிதாக ஏதாவது மாலை நேர சிற்றுண்டி செய்ய வேண்டும் என்று தோன்றும் பொழுதோ? என்ன செய்வதே என்று தெரியாமல் குழப்பமாக உள்ள பொழுது கூட இந்த வடையை சுலபமாக வீட்டில் பொருட்களை வைத்தே செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Onion Vada
Yield: 5
Calories: 360kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 5 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 ஸ்பூன் மைதா மாவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  •  
    முதலில் வெங்காயத்தை தோலை உரித்து கழுவி விட்டு நீளவாக்கில் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • பிறகு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி துண்டு, கறுவேப்பிலையையும் பொடியாத நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கைகளால் நன்றாக பிசறி விட வேண்டும். அப்பொழுதுதான் வெங்காயத்தின் அடுக்குகள் தனித்தனியாக பிரிந்து வரும் ஐந்து நிமிடம் கையால் நன்றாக வெங்காயத்தை பிசறிவிட வேண்டும்.
  •  பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, கறுவேப்பிலை சேர்த்து நன்றாக பிசறி விட வேண்டும். அதன் பிறகு மைதா மாவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். வடை தட்டுவதற்கு போன்ற பதம் வரை நன்றாக பிசற வேண்டும்.   இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது வெங்காயம் பிசறும் பொழுது வந்து தண்ணீரே போதுமானதாக இருக்கும்.
  • இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பிசறி வைத்துள்ள வெங்காய மைதா கலவையை எடுத்து உருட்டி வடைகளாக தட்டி எண்ணெயில் போடவும்.இருபுறமும் திருப்பி போட்டு பொரித்தெடுக்க வேண்டும். வடை மாவு அனைத்தையும் இவ்வாறு தட்டி பொரித்து எடுக்க வேண்டும்.
  •  அவ்வளவுதான் பொரித்த வடைகளை ஒரு தட்டிற்கு மாற்றி சூடாக பரிமாறினால் சுவையான கேரள ஸ்டைல் டீக்கடை வெங்காய வடை தயார்

Nutrition

Serving: 600g | Calories: 360kcal | Carbohydrates: 16g | Protein: 30.5g | Fat: 6g | Saturated Fat: 2.9g | Sodium: 2.9mg | Potassium: 6.1mg | Fiber: 0.6g