மட்டி – கத்தரிக்காய் தொக்கு ஒரு முறை இப்படி சுவைத்து விட்டால், இதே வேண்டும் என்று அடம் பிடிப்பீப்பார்கள்!

- Advertisement -

சிப்பி (மட்டி) – கத்தரிக்காய் தொக்கு , மட்டி இது கடலில் கிடைக்கும் உணவு. இதன் ருசியே தனி. இது சிப்பிக்குள் இருக்கும். சிப்பிகளை ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வேகவைக்கவும். அது வெந்ததும் சிப்பி சற்று வாய்திருந்திருக்கும். சிப்பியை திறந்தால் நன்றாக வெந்த மட்டி கிடைக்கும். அசத்தலான சுவையில் வித்தியாசமான மசாலா கலவையோடு சிப்பி (மட்டி) – கத்தரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

-விளம்பரம்-

- Advertisement -
Print
5 from 1 vote

சிப்பி (மட்டி) – கத்தரிக்காய் தொக்கு | Oyster Brinjal Curry

அசத்தலான சுவையில் வித்தியாசமான மசாலா கலவையோடு சிப்பி (மட்டி) – கத்தரிக்காய்தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றித்தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
Prep Time20 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Yield: 4
Calories: 1088kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ மட்டி
  • 2 கத்தரிக்காய்
  • 1 கப் சிறிய வெங்காயம்
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
  • 2 தேக்கரண்டி மிளகாய்தூள்
  • 2 தேக்கரண்டி சோம்புத்தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 3 பச்சைமிளகாய்
  • கறிவேப்பில்லை தாளிக்க
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், நறுக்கிய கத்தரிக்காய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
  • பின் வெந்த மட்டி சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.
  • கத்தரிக்காய் நன்றாக வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். அத்துடன் கறிவேப்பிலை தாளித்து பரிமாறவும். சுவையான சிப்பி (மட்டி) கத்தரிக்காய் தொக்கு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 1088kcal | Protein: 66.6g | Fat: 79.9g | Fiber: 34.2g