காலை நேரத்தில் ஈஸியாக அதே நேரம் ருசியாகவும் செய்ய பாசி பருப்பு சாதம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

கொங்கு மண்டலத்தின் ஃபேவரிட் உணவு, இந்த பாசிப்பருப்பு சாதம். குறிப்பாகத் திருப்பூர், கோவை, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரிசிம் பருப்பு சாதம் வெகு பிரபலம். வீடுகளில் வாரம் ஒருமுறையாவது இந்த உணவைச் சமைத்துவிடுவார்கள். இந்த உணவை கொங்கு நாட்டுப் பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். காலை, மதியம், இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற ருசியான உணவு வகை இது. தட்டைப் பயிறு, அவரைப்பயிறு, கொள்ளு என தங்களுக்குப் பிடித்த பயிறு வகைகளைக் கொண்டும் பருப்பு சாதம் தயாரிக்கலாம்.

-விளம்பரம்-

தொட்டுக்கொள்ள கடலைச் சட்னி, புளிச் சட்னி அல்லது ஊறுகாய் நல்ல சாய்ஸ். வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா இனி காலையில் இந்த பாசிபருப்பு சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுத்து விடுங்கள். உடலுக்கு நல்ல சத்துக்கள் அளிக்கும்.! இட்லி, தோசைக்கு பதிலாக குழந்தைகளுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு பாசிப்பருப்பு சாதம் தான் சிறந்தது. பருப்பு புரதச்சத்து நிறைந்தது. வளரும் குழந்தைகளுக்கு இது அவசியம்.

- Advertisement -

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உடலுக்கு சத்தாக இருக்கும் வகையில், காலையில் விரைவில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், புரோட்டீன் அதிகம் இருக்கக்கூடிய பாசிபருப்பை வைத்து ஒரு சாதம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த பருப்பு சாதத்தை காலை வேளையில் செய்வது என்பது மிகவும் ஈஸி. பாசிபருப்பு சாதம் செய்து அதன் மேல் நெய் ஊறி கொடுங்கள். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள். அப்படிப்பட்ட அருமையான பருப்பு சாதத்தை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
4.50 from 2 votes

பாசி பருப்பு சாதம் | Paasi Paruppu Sadam Recipe In Tamil

கொங்கு மண்டலத்தின் ஃபேவரிட் உணவு, இந்த பாசிப்பருப்பு சாதம். குறிப்பாகத் திருப்பூர், கோவை, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரிசிம் பருப்பு சாதம் வெகு பிரபலம். வீடுகளில் வாரம் ஒருமுறையாவது இந்த உணவைச் சமைத்துவிடுவார்கள். இந்த உணவை கொங்கு நாட்டுப் பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். காலை, மதியம், இரவு என எந்த வேளைக்கும் ஏற்ற ருசியான உணவு வகை இது. தட்டைப் பயிறு, அவரைப்பயிறு, கொள்ளு என தங்களுக்குப் பிடித்த பயிறு வகைகளைக் கொண்டும் பருப்பு சாதம் தயாரிக்கலாம். தொட்டுக்கொள்ள கடலைச் சட்னி, புளிச் சட்னி அல்லது ஊறுகாய் நல்ல சாய்ஸ். வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா இனி காலையில் இந்த பாசிபருப்பு சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுத்து விடுங்கள். உடலுக்கு நல்ல சத்துக்கள் அளிக்கும்.! இட்லி, தோசைக்கு பதிலாக குழந்தைகளுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு பாசிப்பருப்பு சாதம் தான் சிறந்தது.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: paasi paruppu sadam
Yield: 3 People
Calories: 212kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 டம்ளர் அரிசி
  • 150 கி பாசிப்பருப்பு
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • கொத்தமல்லி, புதினா சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை நன்கு அலசி விட்டு ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அரிசியை நன்கு அலசி விட்டு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு கொதி வந்த பிறகு ஊற வைத்த அரிசி மற்றும் ‌பாசிப்பருப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாசிப்பருப்பு சாதம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 212kcal | Carbohydrates: 3.8g | Protein: 14.5g | Fat: 1.8g | Saturated Fat: 0.24g | Sodium: 4mg | Potassium: 57mg | Fiber: 15.4g | Vitamin C: 13.2mg | Calcium: 80.6mg | Iron: 2.06mg

இதனையும் படியுங்கள் : காரசாரமாக கடப்பா பூண்டு பொடி இப்படி செய்தால் இட்லி, தோசை, சாதம் எது கூட வேண்டுமானாலும் சாப்பிடலாம்!