கிராமத்து சமையல் முறையில் ஆரோக்கியமான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!!!

- Advertisement -

கறி சுவையை விட சில சமயங்களில் சைவ குழம்புகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த வகையில் பாசிப்பயறு குழம்பும் ஒன்று! அருமையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ரொம்ப ஈசியாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? வீடு மணக்கும் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிடும் பொழுது எப்படி இருக்கும் தெரியுமா? இந்த பாசிப்பயறு குழம்பு ரெசிபி எப்படி செய்வது? என்று இனி தொடர்ந்து இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

-விளம்பரம்-

பாசிப்பயறு சுண்டல் பாசிப்பயறு தோசை என்று வைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்த இந்த பச்சை பயறில் (பாசிப்பயறு ) நிமிடத்தில் சுவையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி,தோசை,அரிசி உப்புமா சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்தத் பாசிப்பயறு தண்ணிக் குழம்பு ருசியாக இருக்கும். குறிப்பாக சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்பு போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். . உங்க வீட்ல செய்துபாருங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
4 from 2 votes

பாசிப்பயறு தண்ணிக் குழம்பு | Paasipayiru Thanni Kulambu in Tamil

பாசிப்பயறுசுண்டல் பாசிப்பயறு தோசை என்று வைத்து சாப்பிட்டு போரடிக்குதா. ஆரோக்கியம் நிறைந்தஇந்த பச்சை பயறில் (பாசிப்பயறு ) நிமிடத்தில் சுவையான பாசிப்பயறு தண்ணிக் குழம்பு எப்படிசெய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.இட்லி,தோசை,அரிசி உப்புமா சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்தத் பாசிப்பயறு தண்ணிக் குழம்புருசியாக இருக்கும். குறிப்பாக சுட சுட வெள்ளை சாதத்தில் இந்த பாசிப்பயறு தண்ணிக் குழம்புபோட்டு கொஞ்சம் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். . உங்கவீட்ல செய்துபாருங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Paasipayiru Thanni Kulambu
Yield: 4
Calories: 188kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் பாசிப்பயறு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 நெல்லிக்காயளவு புளி
  • 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  • 1 தேக்கரண்டி மல்லிப் பொடி
  • 1 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

அரைக்க

  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 2 பல் பூண்டு
  • 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்

செய்முறை

  • பாசிப்பயறை வாசனை வர வறுத்து அரைலிட்டர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
  • அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும், புளியை நூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துவடிகட்டி அரைத்த விழுதை சேர்த்து கலக்கி வைக்கவும்,
  • மிளகாயை கீறி, வெங்காயத்தை குறுக்கில் இரண்டாகவும் தக்காளியை நான்காகவும் நறுக்கி வைக்கவும்,
  • பயறு பாதி வெந்ததும் வெங்காயம், தக்காளி, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு புளிக்கரைசலை ஊற்றி மேலும் ஆறு நிமிடம் கொதிக்க விடவும்.
  • பின் இறக்கி விட்டு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் வெடிக்க விட்டு இரண்டு சின்ன வெங்காயங்களை தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போட்டு குழம்பில் கொட்டி இறுக மூடி வைக்கவும்.

Nutrition

Serving: 500g | Calories: 188kcal | Carbohydrates: 14.3g | Protein: 2.9g | Fat: 3.8g | Sodium: 542.7mg | Fiber: 2.8g | Vitamin C: 13.4mg