நம்ம பொதுவா வெளியில எங்கேயாவது போயிட்டு வந்தா வீட்ல வந்து சமைக்கிறதுக்கு ரொம்பவே போர் அடிக்கும் அதனால பெரும்பாலும் கடைகளிலேயே வாங்கி நம்ம சாப்பிடுவோம். ஆனா அந்த மாதிரி சாப்பிடுவது உடம்புக்கு ஆரோக்கியமானதா இருக்காது. அதனால உங்க வீட்ல தோசை மாவு இருந்தா மட்டும் போதும் சட்டுனு இந்த பச்சை புளி சட்னி செஞ்சு தோசை சுட்டு கொடுத்தா வேலை முடிந்துவிடும்.
நம்ம இவ்வளவு சட்னி சாப்ட்ருப்போம் தேங்காய் சட்னி தக்காளி சட்னி, காரச் சட்னி, பூண்டு சட்னி மிளகாய் சட்னி புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி, கொத்தமல்லி சட்னி அப்படின்னு எல்லாமே சாப்பிட்டு ருசித்து இருப்போம் ஆனால் கண்டிப்பா நீங்க இந்த பச்சை புளி சட்னி உங்க வாழ்க்கையில் ஒரு தடவை கூட சாப்பிட்டு இருக்க மாட்டீங்க ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சீக்கிரமா வேலையை முடிக்கணும் அப்படின்னா இந்த பச்சை புளி சட்னியை செஞ்சு முடிச்சிருங்க. ஒரு தோசை சாப்பிடுற இடத்துல ரெண்டு மூணு தோசை கூட கண்டிப்பா சாப்பிடுவாங்க.
இந்த சட்னியை நம்ம அவசர சட்னி ஒரு நிமிஷம் சட்னி கூட சொல்லலாம். சின்ன வெங்காயம் சேர்த்து செய்ததால் அதோட டேஸ்ட் இன்னும் அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கு மதியம் டிபன் பாக்ஸுக்கு கூட இந்த பச்ச புளி சட்டியை செஞ்சு கொடுக்கலாம். இதுல நல்லெண்ணெய் ஊத்தி தாளிக்கிறதால இதோட வாசனையும் ரொம்பவே அருமையாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான அருமையான சீக்கிரத்தில் செய்யக்கூடிய பச்ச புளி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பச்ச புளி சட்னி | Pacha puli Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 20 சின்ன வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 1 சிறிய எலுமிச்சை பழ அளவு புளி
- உப்பு தேவையான அளவு
- 7 பச்சை மிளகாய்
செய்முறை
- முதலில் சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்
- ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் புளி தேவையான அளவு உப்பு அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்
- ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக காய வைத்து அதில் கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலைபோட்டு தாளித்து கொள்ளவும்
- பிறகு அரைத்து வைத்துள்ள சட்னியில் சுடச்சுட நல்லெண்ணையில் தாளித்த தாளிப்பை சேர்த்து கிளறினால் சுவையான பச்ச புளி சட்னி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : வறுத்து அரைச்ச ருசியான தேங்காய் சட்னி இனி இப்படி வீட்டில் செஞ்சி கொடுங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!