Home சட்னி வறுத்து அரைச்ச ருசியான தேங்காய் சட்னி இனி இப்படி வீட்டில் செஞ்சி கொடுங்க! 2 தோசை...

வறுத்து அரைச்ச ருசியான தேங்காய் சட்னி இனி இப்படி வீட்டில் செஞ்சி கொடுங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

இட்லி தோசைக்கு நமக்கு ரொம்பவே ஈஸியா இருக்க கூடிய ஒரு சட்னி என்றால் அது தேங்காய் சட்னி தான். என்னதான் தக்காளி சட்னி காரச்சட்னி, பூண்டு சட்னி மிளகாய் சட்னி புதினா சட்னி அப்படின்னு எக்கச்சக்கமான சட்னி இருந்தாலும் சாம்பார் கூட ஒரு சூப்பரான காம்பினேஷன் இட்லிக்கு தேங்காய் சட்னி தான். தேங்காய் சட்னியும் தக்காளி சட்னியும் சேர்த்து வச்சு இட்லி தோசை சாப்பிடும்போது இன்னும் ரெண்டு சேர்த்தே சாப்பிடலாம் அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.

-விளம்பரம்-

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே புடிச்ச சட்னி தான் தேங்காய் சட்னி அதுகே கொஞ்சம் டிஃபரண்டா வறுத்து அரைச்சு செஞ்சா இன்னும் ரொம்ப வே டேஸ்ட்டா இருக்கும் இந்த சட்னி நிறைய பேர் செஞ்சி சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த முறையில செஞ்சு சாப்பிட்டு பாருங்க தேங்காய் சட்னி ஒரு சில பேருக்கு பிடிக்காது அவங்களே இந்த சட்னியை ரொம்ப விரும்பி சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க.

அதுக்கப்புறம் உங்களுக்கு எப்போ தேங்காய் சட்னி சாப்பிடணும்னு தோணுனாலும் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுவீங்க. ரொம்ப வெயிட் குறைவான பொருட்கள்ல ஒரு சூப்பரான சட்னி சாப்பிடணும் அப்படின்னா அதுவும் சட்டுனு செய்யணும் அப்படின்னா இந்த வறுத்து அரைச்ச தேங்காய் சட்னியை செஞ்சு பாருங்க. இந்த சட்னில நிறைய தண்ணி ஊத்தி செஞ்சா அதை இட்லி தோசைக்கு வச்சுக்கலாம் தண்ணிய ஊத்தாம கெட்டியா வச்சா அத ரசம் சாதத்துக்கு புளியோதரைக்கு லெமன் சாதத்துக்கு எல்லாம் வைத்து சாப்பிட்டால் ஒரு அருமையான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
4 from 1 vote

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி | Fried Coconut Chutney

உங்களுக்கு எப்போ தேங்காய் சட்னி சாப்பிடணும்னு தோணுனாலும் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுவீங்க.ரொம்ப வெயிட் குறைவான பொருட்கள்ல ஒரு சூப்பரான சட்னி சாப்பிடணும் அப்படின்னா அதுவும்சட்டுனு செய்யணும் அப்படின்னா இந்த வறுத்து அரைச்ச தேங்காய் சட்னியை செஞ்சு பாருங்க.இந்த சட்னில நிறைய தண்ணி ஊத்தி செஞ்சா அதை இட்லி தோசைக்கு வச்சுக்கலாம் தண்ணிய ஊத்தாமகெட்டியா வச்சா அத ரசம் சாதத்துக்கு புளியோதரைக்கு லெமன் சாதத்துக்கு எல்லாம் வைத்துசாப்பிட்டால் ஒரு அருமையான காம்பினேஷனா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான வறுத்துஅரைத்த தேங்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Fried Coconut Chutney
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் தேங்காய் துருவல்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு
  • 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • சிறிய நெல்லிக்காய் அளவு புளி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாகவறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதே கடாயில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • அனைத்தும் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் அதனுடன் புளி மற்றும்உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்துதாளித்து அதில் சேர்த்து விட்டால் சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 71mg | Potassium: 328mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பேச்சுலர்ஸ்  கார சட்னி இப்படி அரைச்சா டேஸ்டுல மயங்கிடுவீங்க! அவ்வளவு ருசியாக இருக்கும்!