உங்களுக்கு கார சட்னினா ரொம்ப பிடிக்குமா ? அதுவும் ஈஸியா கார சட்னி செய்தால் இட்லி தோசைக்கு அதிகமா தொட்டு சாப்பிடுவதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இதுல என்ன நிறைய பேருக்கு காரமா சாப்பிடுவது ரொம்பவே பிடிக்கும். அப்படி காரத்து மேல விருப்பம் இருக்கிறவங்களுக்காகவே ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான இந்த ஈஸியான பேச்சுலர்ஸ் கார சட்னியை நம்ம செய்ய போறோம்.
நம்ம இளமையா பேச்சுலர்ஸா இருக்கும் போது அதிகழா கார உணவுகளை தான் எடுத்துபோம். அப்படி நமக்கு பிடித்தமான ஒரு சட்னி அப்படினா அது காரசட்னி தான். கண்ணுல தண்ணீர் வர வர இட்லிக்கோ இல்லை என்றால் தோசைக்கோ இந்த காரசட்னி சேர்த்து சாழ்ழிடும் போது அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த கார சட்னி செம்ம காரமா இருக்க போகுது உங்களுக்கு காரம் எந்த அளவுக்கு பிடிக்கும் அப்படிங்கிறது இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி சாப்பிட்டால் தெரிஞ்சிக்கலாம்.
அப்படி ஒரு காரமா இருக்க போகுது. இட்லியை தோசை இதுக்கெல்லாம் சுவையை கொடுக்கக்கூடியது அதோட சட்னியும் சாம்பாரும் தான். அப்படி நீங்க ருசியான இட்லியும் தோசையும் சாப்பிடணும்னா இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி வைத்து சாப்பிட்டு பாருங்க. ரொம்பவே சுவையா இன்னும் நிறைய சாப்பிடணும் என்கிற ஆசையும் அதிகமா தூண்டும் இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி. சரி வாங்க இந்த பேச்சுலர்ஸ் கார சட்னி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
பேச்சுலர்ஸ் கார சட்னி | Bachelors Kaara Chutney In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 10 காய்ந்த மிளகாய்
- 15 பூண்டு
- 15 சின்ன வெங்காயம்
- புளி நெல்லிக்காய் அளவு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் காய்ந்த மிளகாய் காம்பை கிள்ளி விட்டு அதன் மேல் உள்ள தலைப்பகுதி நறுக்கிவிட்டு உள்ளே உள்ள மிளகாய் விதைகளை எடுத்து விட வேண்டும். விதைகளை எடுத்த காய்ந்த மிளகாய்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஒரு மணி நேரம் ஊறிய காய்ந்த மிளகாய்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் புளியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அதில் வெங்காயம் , பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடவும்.
- இந்த சட்னி லேசாக சூடு வந்ததும் நன்றாக கலந்து விட்டு இட்லி , தோசைக்கு பரிமாறினால் சுவையான காரமானகம கம சூடான பேச்சுலர்ஸ் கார சட்னி தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான கிரிஸ்பி பைங்கன் இப்படி மிஸ் பண்ணமா ட்ரை பண்ணி பாருங்கள்!