மாலை நேர சிற்றுண்டி அப்படின்னு சொன்னா நமக்கெல்லாம் ஞாபகம் வருது வடை, பஜ்ஜி, சம்சா, போண்டா, பாயாசம் இல்லையா ஏதாவது பயிறு சுண்டல் அந்த மாதிரி சாப்பிடுவோம். வட மாநிலங்களில் இந்த மாலை நேர சிற்றுண்டிக்கு அவங்க செய்ற ஒரு மாலை நேர சிற்றுண்டி தான் கிரிஸ்பியான பைங்கன் அதாவது கத்தரிக்காய் வறுவல்னு சொல்லலாம். அப்படி கத்திரிக்காயை வைத்து சுவையான ஒரு பைங்கன் செய்ய போறோம்.
அது கிரிஸ்பியா நல்ல மொறு மொறுன்னு வாயில வச்சதும் அதை அப்படியே நமக்கு நல்ல ஒரு பிளேவரோட உள்ள இறங்கும். இப்படி சுவையா அந்த கத்திரிக்காய் வச்சு மழை நேரத்தில் நல்ல மொறு மொறுன்னு இந்த பைங்கன் செய்து சாப்பிட்டோம்னா அப்படி ஒரு டேஸ்ட்டா இருக்கும். அதுவும் இந்த சீசனுக்கு சூடா இது சாப்பிடும் போது ரொம்பவே நல்லா இருக்கும். இந்த மாதிரி சுவையான பைங்கன் வந்து வட மாநிலங்களில் ரொம்பவே ஃபேமஸான ஒரு மாலை நேர சிற்றுண்டி. சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும்.
அந்த அளவுக்கு சுவையாக இருக்கும் விருப்பம் உள்ளதாகவும் இருக்கும். கத்திரிக்காய் நல்லா பெரியதாக வாங்கனும் அப்போது தான் கட் பண்ணும் போது நல்ல வட்ட வடிவமாக வரும் அதுல நம்ம செய்யும்போதும் நல்ல சாப்பிடுவதற்கு டேஸ்ட்டா இருக்கு. இந்த ரொம்பவே சுவையான பைங்கன் எப்படி வீட்ல ரொம்ப சுலபமா செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம் இது செய்யறது ரொம்பவே ஈஸி. இந்த சுவையான பைங்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாமா வாங்க.
கிரிஸ்பி பைங்கன் | Crispy Baingan Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கத்திரிக்காய் பெரியது
- 2 பச்சைமிளகாய்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1 ஸ்பூன் கரமசாலா
- 1 ஸ்பூன் சாம்பார் பொடி
- 1 கப் ரவை
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- கத்தரிக்காய்களை சுத்தம் செய்து பின்பு சற்றே தடிமனாக வில்லைகளாக அவற்றை நறுக்கி எடுத்து வைத்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு விழுத, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி, உப்பு, பச்சை மிளகாய், எலுமிச்சை பழச்சாறு இவற்றை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு இந்த மசாலாவை கத்திரிக்காய்களில் இரண்டு புறமும் நன்றாக பூசவும் பின்பு அவற்றை பத்து நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் ரவையைக் கொட்டி அதோடு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். மசாலா தடவிய கத்தரிக்காய்களை ரவையில் பிரட்டி எடுத்துகொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொற்றையும் வைத்து இருபுறமும் மொறுமொறுப்பாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- வறுத்த கத்தரிக்காய் மீது கொத்தமல்லி தழையை தூவி சூடாக பரிமாறினால் சுவையான பைங்கன் தயார்.