காரசாரமான ருசியில் பச்சைமிளகாய் சாம்பார் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

pachaimilagai sambar
- Advertisement -

கமகமக்கும் பச்சை மிளகாய் சாம்பார் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-
pachai milagai sambar
Print
No ratings yet

பச்சைமிளகாய் சாம்பார் | Pachaimilagai Sambar Recipe In Tamil

கமகமக்கும் பச்சை மிளகாய் சாம்பார் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time22 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: sambar, சாம்பார்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கத்திரிக்காய்
  • 2 முருங்கைக்காய்
  • 3 அவரைக்காய்
  • 8 பச்சைமிளகாய்
  • ½ கப் துவரம் பருப்பு
  • 12 சின்ன வெங்காயம்
  • பெரிய வெங்காயம் பாதி
  • ¾ கப் தேங்காய் துருவல்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 மிளகாய் வற்றல்
  • தக்காளி பாதி
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • முதலில் கத்தரிக்காய், முருங்கைகாய் இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவரைக்காயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரம் அல்லது ப்ரஷர் பானில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, அதில் பருப்பைக் கொட்டி மூடிவைத்து சுமார் 3 நிமிடங்கள் வேகவிடவும்.
  • அடுத்து பருப்பு வெந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கள் மற்றும் சின்ன வெங்காயத்தையும் அதில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
  • பின்னர் மூடியைத் திறந்து, கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். உப்பையும் சேர்க்கவும். கரண்டியால் கலக்கி விட்டு வேகவிடவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டுத் தாளிக்கவும்.
  • பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலைப் போட்டு சற்று நேரம் வதக்கவும்.
  • வதக்கியவற்றை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இரண்டு நிமிடங்கள் கழித்து, அரைத்து வைத்துள்ள தேங்காய், பச்சை மிளகாய் விழுதினை சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் மூடி வைத்து வேகவிடவும். சுமார் 4 நிமிடங்கள் வேக விட்டு இறக்கிவிடவும்.
  • இப்போது பச்சை மிளகாய் சாம்பார் தயார்
- Advertisement -