- Advertisement -
பலாப் பழத்தில் இருக்கும் சுவை அமிர்தம் போன்று இருக்கும் அது போல அதன் இலை நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும், அந்த இலையை வைத்து இட்லி செய்தால் சுவை அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பண்ருட்டி பலா இலை இட்லி
இதையும் படியுங்கள்: மென்மையான ஒட்ஸ் பார்லி இட்லி இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்!
- Advertisement -
விரும்பி உண்பர்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த பண்ருட்டி பலா இலை இட்லி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
-விளம்பரம்-
பலா இலை இட்லி| Palaa Ilai Idli Receipe in Tamil
சூடான சுவையான பாரம்பரிய பலா இலை இட்லி பலாப் பழத்தில் இருக்கும் சுவை அமிர்தம் போன்று இருக்கும் அது போல அதன் இலை நறுமணம் மிகவும் அருமையாக இருக்கும், அந்த இலையை வைத்து இட்லி செய்தால் சுவை அருமையாக இருக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலா இலை இட்லி விரும்பி உண்பர்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்
Yield: 3 people
Calories: 321kcal
Equipment
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 2 cup பச்சரிசி
- 1 cup உளுத்தம்பருப்பு
- 1 cup துருவிய தேங்காய்
- உப்பு தேவையான அளவு
- பலா மரத்தின் இளம் இலைகள் சிறிதளவு
செய்முறை
- அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவையுங்கள். ஊறவைத்தவுடன், அவற்றை அரைக்கலாம். ஒரு மிக்ஸி கிரைண்டரில், ஊறவைத்த உளுத்தம் பருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கரகரப்பாக மாவாக அரைக்க வேண்டும்.
- அரைத்த உளுந்தை ஒரு பெரிய கிண்ணத்தில் மாற்றவும். அதே மிக்சி கிரைண்டரில், அரிசியைச் சேர்த்து ஒரு நேரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு செய்யவும்.
- அரிசியை உளுத்தம் பருப்பு போன்ற அதே கிண்ணத்தில் மாற்றவும். உப்பு சேர்த்துக் கரைத்து6 மணி நேரமாவது இருக்க வேண்டும்.
- பலா இலைகளில் நான்கை எடுத்து, முதலில் இரண்டு இலைகளின் அடி பாகத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, சிறு குச்சியால் குத்தி இணைத்துக்கொள்ளுங்கள்.
- பிறகு, மீண்டும் இரண்டு இலைகளை இதன் மேல் குறுக்காக வைத்து, குச்சியால் குத்தி இணையுங்கள். இந்த நான்கு இலைகளையும் மடக்கி கப்' போல செய்யுங்கள்.
- இப்படியே எல்லா இலைகளையும் செய்துகொள்ளுங்கள். இந்த இலை கப்புகளில் மாவை ஊற்றி, இட்லித் தட்டில் வைத்து வேகவைத்தெடுங்கள். நறுமணம் கமழும் சுவையான பலா இட்லி தயார்
Nutrition
Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 78.3g | Polyunsaturated Fat: 0.76g | Sodium: 2311mg | Potassium: 0.2mg | Sugar: 0.9g | Calcium: 3.2mg