மென்மையான ஒட்ஸ் பார்லி இட்லி இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்!

- Advertisement -

ஆரோக்கியமான காலை உணவையை உண்போம். பொதுவாக காலையில் இட்லி தோசை போன்ற டிபன் உணவுகளை உணபர். இன்னும் சிலர் ஓட்ஸ் போன்ற உணவுகளை உண்பார்கள். இதற்கு மாற்றாக இது இரண்டையும் இணைத்து ஓட்ஸ் பார்லி இட்லி செய்து ஆரோக்கியமான உணவை உண்டு உங்கள் காலை தொடக்கத்தை

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : பஞ்சு போன்ற மென்மையான தட்டு இட்லி செய்வது எப்படி ?

- Advertisement -

ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளமாகயிட்டு தினமும் காலையில் இந்த ஓட்ஸ் பார்லி இட்லி அல்லது தோசையாக கூட செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த ஒட்ஸ் பார்லி இட்லி எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

ஒட்ஸ் பார்லி இட்லி | Oats Barley Idli Recipe in Tamil

பொதுவாக காலையில் இட்லி தோசை போன்ற டிபன் உணவுகளை உணபர். இன்னும் சிலர் ஓட்ஸ் போன்ற உணவுகளை உண்பார்கள். இதற்கு மாற்றாக இது இரண்டையும் இணைத்து ஓட்ஸ் பார்லி இட்லி செய்து ஆரோக்கியமான உணவை உண்டு உங்கள் காலை தொடக்கத்தை ஆரோக்கியமான வாழ்வின் அடித்தளமாகயிட்டு தினமும் காலையில் இந்த ஓட்ஸ் பார்லி இட்லி அல்லது தோசையாக கூட செய்து பாருங்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: idli, இட்லி
Yield: 4 People
Calories: 79kcal

Equipment

 • 1 கிரைண்டர்
 • 1 இட்லி அடுப்பு
 • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

 • 1 கப் ஒட்ஸ்
 • 1 கப் பார்லி
 • 1/2 கப் உளுந்து
 • 1/2 Tsp வெந்தயம்
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 • முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பார்லி,ஓட்ஸ், உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
 • பின்னர் இவற்றை கிரைண்டரில் போட்டு நன்கு இட்லி பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • அரைத்து எடுத்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து மூடி வைத்து மூடிவிட வேண்டும்.
 • பின்பு இந்த மாவு எட்டு மணி நேரத்துக்கு பிறகு புளித்து நன்கு பொங்கி வரும் போது நன்கு கிண்டி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 • பின்னர் ஒரு இட்லி குண்டாவை எடுத்துக்கொண்டு அதில் உங்களுக்கு தேவையான அளவு இட்லி ஊற்றி இட்லி வெந்தவுடன் எடுத்தால் மனம் மணக்கும் ஓட்ஸ் பார்லி இட்லி ரெடி.
 • இல்லை ஒரு சிலர்க்கு இட்லி பிடிக்கவில்லை என்றால் தோசை ஊற்றி சாப்பிட்டாலும் கூடுதல் மணமாக தான் இருக்கும் இதற்கு தொட்டுக்கிட தேங்காய் சட்னி, மல்லி சட்னி மற்றும் சாம்பார் இவற்றுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 550Gram | Calories: 79kcal | Carbohydrates: 45g | Protein: 13g | Fat: 0.5g | Cholesterol: 0.2mg | Sodium: 3mg | Fiber: 4g | Sugar: 0.1g

LEAVE A REPLY

Recipe Rating
Please enter your comment!
Please enter your name here