சைவ மட்டன் என்ன சொல்லப்படும் பலாக்காய் மசாலா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

பல  நிகழ்ச்சிகள்ல அசைவ உணவுகளுக்கு பதிலாக சைவ உணவுகளை அசைவ சுவையில் செய்து குடுத்துட்டு இருக்காங்க. அப்படி மட்டனுக்கு பதிலா  பயன்படுத்தப்படுகிற ஒரு காய்தான் பலாக்காய் பிஞ்சு. அப்படி அந்த பலாக்காய் பிஞ்சு எவ்வளவு சுவையாக ருசியாவும் அப்படியே மட்டன் சுவையில் இருக்கு. சைவ மட்டன் என்று அழைக்கப்படும் இந்த பலாக்காய் பிஞ்சு. இந்த பலாக்காய் மசாலா ரொம்பவே சுவையா எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம்.

-விளம்பரம்-

அசைவ சுவைல இந்த பலாக்காய் மசாலா எப்படி செய்வது பார்க்கலாம். இதுவரைக்கும் பலாக்காய் பிஞ்சில எந்த ஒரு உணவும் செய்யாதவங்க இப்போ புதுசா ட்ரை பண்ணி பாருங்க. இது ரொம்பவே சுவையா அப்படியே மட்டன் சுவையில் கிடைக்கும். இது சைவ உணவுகள் சாப்பிடறவங்களா இருந்தீங்கன்னா நீங்க இந்த பலாக்காய சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ப கடைகளில் நிறையவே கிடைக்கிறது இந்த பலாக்காய் பிஞ்சு. 

- Advertisement -

அப்படி கிடைக்கலைனு கவலைப்படவே வேண்டாம் கிராமப்புறங்களையும் சரி நகர்புறங்களையும் சரி எல்லா காய்கறி கடைகளையும் இப்போ பலா காய்.பிஞ்சுகள் கிடைக்க ஆரம்பிக்குது. தோலை செத்திட்டு அழகா சின்ன சின்ன சின்னதா கட் பண்ணி வேகவைத்து சமைத்தால் ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி சுவையான ருசி இந்த மட்டன் சுவையில் பலாக்காய் மசாலா எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
3 from 1 vote

பலாக்காய் மசாலா | Palakai Masala Recipe In Tamil

பலாக்காய்மசாலா எப்படி செய்வது பார்க்கலாம். இதுவரைக்கும் பலாக்காய் பிஞ்சில எந்த ஒரு உணவும் செய்யாதவங்க இப்போ புதுசா ட்ரை பண்ணி பாருங்க. இது ரொம்பவே சுவையா அப்படியே மட்டன் சுவையில் கிடைக்கும். இது சைவ உணவுகள் சாப்பிடறவங்களா இருந்தீங்கன்னா நீங்க இந்த பலாக்காய சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ப கடைகளில் நிறையவே கிடைக்கிறது இந்த பலாக்காய் பிஞ்சு.அப்படி சுவையான ருசி இந்த மட்டன் சுவையில் பலாக்காய் மசாலா எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம். 
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Palakai Masala
Yield: 4
Calories: 95kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பலாக்காய் பிஞ்சு
  • 2 வெங்காயம்
  • 6 காய்ந்த மிளகாய்
  • 2 தக்காளி
  • 1 கப் தேங்காய்பூ
  • 1/2 ஸ்பூன் கசகசா
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • மஞ்சள்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • பலாக்காய் முதலில் தோலை நீக்கி விட்டு டைமண்ட் சைசில் நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பலாக்காய் நறுக்கும் பொழுது கைகளிலும் கத்தியிலும் எண்ணெய் தடவிக் கொள்ளவும். அப்பொழுதுதான் கையில் பிசுபிசுப்பு தன்மை இருக்காது.
  •  பிறகு அடுப்பில் குக்கரை வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள பலா காய்களை அலசி சேர்த்து உப்பு மஞ்சள் தூள் பலாக்காய் வேகுவதற்கு தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து எடுக்கவும்.
  • பிறகுஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய் , கசகசாவை சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து  சூடானதும்அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
     
  • பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு  வதக்கிஎடுத்துக் கொள்ளவும் .தக்காளி வெங்காயம் நன்றாக குழைந்து வெந்த பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  •  
     பிறகு வேகவைத்து எடுத்து வைத்துள்ள பலா காய் பிஞ்சுகளை அந்த கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கெட்டியானதும் இறக்கிப் பரிமாறினால் சுவையான சைவ மட்டன் பலாக்காய் பிஞ்சு மசாலா தயார்.
     

Nutrition

Serving: 500g | Calories: 95kcal | Carbohydrates: 23.5g | Protein: 9.72g | Fat: 0.64g | Potassium: 303mg | Vitamin A: 410IU | Vitamin C: 13.7mg | Calcium: 34mg | Iron: 0.6mg