Home ஸ்நாக்ஸ் சமையல் ஜாம்பான் வெங்கடேஷ் பட்டின் காரசாரமான பலாக்காய் 65 ரெசி இப்படி சுலபமாக வீட்டில் செஞ்சி...

சமையல் ஜாம்பான் வெங்கடேஷ் பட்டின் காரசாரமான பலாக்காய் 65 ரெசி இப்படி சுலபமாக வீட்டில் செஞ்சி பாருங்க..!

இதுவரை எத்தனையோ 65 ரெசிபிகளை வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் பலாக்காய் 65 செய்திருக்கிறீர்களா? ஆம், பலாக்காயை வைத்து 65 செய்யலாம். இந்த பலாக்காய் 65 அசைவ உணவு சுவையைத் தருவதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக்காய் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும். பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. இதன் மேல் தோல் கரடுமுரடுமாக இருந்தாலும் பழத்தின் சுவை மட்டும் நாவிலே இருக்கும். பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது.

-விளம்பரம்-

மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. ஆனால் பலாக்காயை நான் அவசியம் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ‌ஆனால் இந்த பழம் பெரிதாகக் காய்ப்பதற்கு முன் சிறிய பிஞ்சாக இருக்கும்போதே சமைத்து சாப்பிடும் பழக்கம் நம் தமிழர்களிடையே உண்டு. லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இவற்றில் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பலாக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை உணவில் சேர்த்து பார்வை கோளாறை தவிர்க்கலாம்.

பலாக்காய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய ரத்தம் உற்பத்தி ஆகிறது. வலிமையை ஏற்படுத்துகிறது. தாது விருத்தியடைகிறது. இதனைச் சாப்பிடும் சிலருக்கு ருசியை மந்தப்படுத்தும். ஆகையினால் இதில் இஞ்சி, மிளகு, மிளகாய், சீரகம் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தும். எனவே இந்த கோடையில் இதனை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. அதுமட்டுமின்றி, இதனை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படுவதோடு, புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படும். இப்போது இந்த பலாக்காயை வைத்து எப்படி 65 செய்வதென்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பலாக்காய் 65 | Palakkai 65 Recipe In Tamil

இதுவரை எத்தனையோ 65 ரெசிபிகளை வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் பலாக்காய் 65 செய்திருக்கிறீர்களா? ஆம், பலாக்காயை வைத்து 65 செய்யலாம். இந்த பலாக்காய் 65 அசைவ உணவு சுவையைத் தருவதுடன், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக்காய் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும். பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. இதன் மேல் தோல் கரடுமுரடுமாக இருந்தாலும் பழத்தின் சுவை மட்டும் நாவிலே இருக்கும். பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Palakkai 65
Yield: 4 People
Calories: 157kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 பலாக்காய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர்

செய்முறை

  • முதலில் பலாக்காயை தோல் நீக்கி, சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ‌இரண்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், அரிசி மாவு, சோள மாவு, உப்பு, கேசரி பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு இதனுடன் வேக வைத்த பலா துண்டுகளை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எ‌ண்ணெ‌ய் சேர்த்து நன்கு காய்ந்ததும் பலா துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ‌பலாக்காய் 65 தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 157kcal | Carbohydrates: 9.4g | Protein: 2.8g | Fat: 1.1g | Sodium: 3.3mg | Potassium: 407mg | Fiber: 5.8g | Vitamin A: 540IU | Vitamin C: 12mg | Calcium: 22mg | Iron: 1.9mg