பலாகொட்டை வறுவல் கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. காளான் பொரியல், பன்னீர் பொரியல் போன்ற பல்வேறு சைவ பொரியல்கள் அசைவ பொரியல்களுக்கு சவால் விடுபவை ஆகும். அந்த வரிசையில் பலாக்கொட்டைக் பொரியலும் அசைவப் பிரியர்களை சுண்டியிழுக்கும் ருசியையும் மணத்தையும் கொண்டிருக்கும்.
சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றில் ஏராளமான அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கம். பலாக்கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. பழங்களை விட ஒரு மரத்தை உருவாக்கும் கொட்டையில் மரபணு கூறுகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன் செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை பொரியல் ரெசிபி உதவும்.
தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ்,கேரட், முருங்கை,கோஸ், பட்டாணி என்று சிகேத காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். பலாப்பழத்தின் விதையைக் கொண்டு பல வகையான உணவுகளை செய்யலாம். அதிலும் பொரியல் செய்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். ஆம், பலாக்கொட்டையைக் கொண்டு பொரியல் செய்யலாம். இந்த பொரியல் சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
பலாக்கொட்டை பொரியல் | Palakottai poriyal recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
தாளிக்க
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
பொரியல் செய்ய
- 1 கப் பலாக்கொட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/4 கப் துருவிய தேங்காய்
செய்முறை
- முதலில் வெங்காயம், தக்காளியை கழுவி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து பலாக்கொட்டை மற்றும் அதற்கு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 5 விசில் வரை விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பிறகு வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும், பலாக்கொட்டையை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.
- சிறிது நேரம் கழித்து துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் பலாக்கொட்டை பொரியல் தயார்.