வீடே மணமணக்க சுவையான பனங்கிழங்கு குருமா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! கொஞ்சம் வித்தியாசமாகவும் செஞ்சி பாருங்க!

- Advertisement -

இட்லி தோசை பூரி சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுக்கு பலவகையான சைட் டிஷ் இருந்தாலும் குருமா ஒரு வித்தியாசமான சுவையிலேயே இருக்கும். அது மட்டுமின்றி இந்த ஒரு குருமா இருந்தால் போதும் அனைத்து டிபன் வகைகள் சாப்பாடு என எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படியான ஒரு பனங்கிழங்கு குருமாவை ரொம்ப சுலபமா இப்படி செய்து விடலாம்.

-விளம்பரம்-

பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு வலுகிடைப்பதுடன், ஆரோக்கியமும் மேலோங்கும். இந்த பனங்கிழங்கை அப்படியே சாப்பிடாமல் வித்தியாசமாக குருமா செய்தும் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடியது.

- Advertisement -

பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துகள் அதிகமாக உள்ளன. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவை எளிதாக கிடைக்கப் பெற்றன. பெரும்பாலான மக்கள் இதனை விரும்பி சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் இப்பொழுது உள்ள ஃபாஸ்ட்புட் காலகட்டத்தில் இவ்வாறான சத்துமிக்க உணவுகளை பலரும் கவனத்தில் கொள்வதில்லை. எனவே ஊட்டச்சத்து மிக்க பனங்கிழங்கை வீட்டில் உள்ளவர்களுக்கு பிடித்த வகையில் குருமா செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதனை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

Print
No ratings yet

பனங்கிழங்கு குருமா | Palm Sprout Kuruma Recipe In Tamil

பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில்உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துகள் அதிகமாக உள்ளன. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவைஎளிதாக கிடைக்கப் பெற்றன. பெரும்பாலான மக்கள் இதனை விரும்பி சாப்பிட்டு வந்தார்கள்.ஆனால் இப்பொழுது உள்ள ஃபாஸ்ட்புட் காலகட்டத்தில் இவ்வாறான சத்துமிக்க உணவுகளை பலரும்கவனத்தில் கொள்வதில்லை. எனவே ஊட்டச்சத்து மிக்க பனங்கிழங்கை வீட்டில் உள்ளவர்களுக்குபிடித்த வகையில் குருமா செய்து கொடுத்தால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அதனைஎவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: KURUMA
Cuisine: tamil nadu
Keyword: Palm Sprout Kuruma
Yield: 4
Calories: 374kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 பனங்கிழங்கு
  • 1 உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 டீஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு
  • 1 தக்காளி
  • மல்லித்தழை சிறிது

அரைக்க

  • 10 பச்சை மிளகாய்
  • 1/2 மூடி தேங்காய்
  • 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க

  • 8 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மிளகு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • பட்டை
  • கிராம்பு
  • 1 சிட்டிகை ஏலக்காய் பொடித்தது

செய்முறை

  • வேகவைத்து,தோல் உரித்து, நார் எடுத்து, பின் சிறு சதுரங்களாக (சுண்டைக்காய் அளவு) நறுக்கவும். விழுதாக அரைக்க வேண்டியவற்றை அரைத்தெடுக்கவும்.
  • வெங்காயம்,தக்காளி, உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து,தாளிப்பவற்றை போட்டு தாளித்து, அதில் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும் (அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கொள்ளவும்).
  • அத்துடன் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து 10 நிமிடத்தில் பனங்கிழங்கை சேர்க்கவும்.குருமா சற்று கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு மல்லித்தழை தூவி இறக்கி கால் டீஸ்பூன்எலுமிச்சம்பழச் சாறை ஊற்றி கலந்து பரிமாறவும்.

Nutrition

Serving: 200g | Calories: 374kcal | Carbohydrates: 85.4g | Protein: 8.1g | Potassium: 469mg | Fiber: 4.65g | Calcium: 32.3mg