இந்த 5 பொருள் இருக்கும் ஒரு வீட்டில் பண கஷ்டமே வராது! பணம் வரவு அதிகரித்து கொண்டே இருக்கும்!

- Advertisement -

இன்றைய நாட்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சனைகள் இருந்தாலும் அதில் நாம் எதிர் கொள்ளும் 90% பிரச்சனைகள் பண பிரச்சினையாக தான் இருக்கும் அல்லது பணம் சம்பந்தமான பிரச்சனைகளாக இருக்கும். நாங்கள் எல்லோரும் கடினமாக உழைக்க தான் செய்கிறோம் ஆனால் ஏன் எங்களிடம் மட்டும் பணம் சேரவில்லை என்று யோசிப்பவர் நீங்கள். இப்படிபட்ட நபர்களுக்கு தான் இந்த பதிவு. உங்கள் வீட்டில் இந்த ஐந்து பொருட்களும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையே வராது ஏன் பணக்கஷ்டம் என்ற வார்த்தை கூட உங்கள் வாயிலிருந்து வராது அந்த அளவிற்கு பணம் உங்கள் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்கும். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

விநாயகர் சிலை

நாம் பொதுவாக எந்த விஷயங்களையும் செய்யும் போது முதலில் வணங்கி விட்டு செய்யும் மூலக்கடவுள் தான் விநாயகர். அப்படிப்பட்ட விநாயகர் நடனம் ஆடுவது போன்ற அமைப்பில் இருக்கும் நடனமாடும் விநாயகர் சிலையை வாங்கி உங்கள் வீட்டின் கதவை பார்த்தவாறு இருக்கும் திசையில் வைத்தால் உங்கள் வீட்டின் பண வரவு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர ஒரு நாளும் பணக்கஷ்டம் என்ற வார்த்தையை உங்கள் வாயிலிருந்து வராது.

- Advertisement -

புல்லாங்குழல்

பொதுவாக நம்மிடம் பணம், செல்வங்கள், தங்கம் சேர வேண்டும் என்றால் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். லட்சுமி கடாட்சம் இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பதற்கு சமம் அப்படி லட்சுமி தேவியார் குடி இருக்கும் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமா இருக்கும். அப்படி லட்சுமி கடாட்சத்துடன் விளங்கக்கூடிய பொருள் புல்லாங்குழல் இதை உங்கள் வீட்டில் வைத்திருக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து சம்பந்தமான தோஷங்களும் விலகி பணவரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

தேங்காய்

நாம் எந்த கடவுளுக்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்தாலும் அந்த பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய மகத்துவம் வாய்ந்த பொருள் தேங்காய். இந்த தேங்காயில் நேர்மறை ஆற்றலை வெளியிடும் சக்தி அதிகமாக உள்ளது. இந்த தேங்காயை நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்திலும், உங்கள் வீட்டிலும் எப்போதும் இருக்கும்படி செய்து கொண்டே இருந்தால் பண பிரச்சினை என்பதை உங்களுக்கு இருக்காது. உங்களுக்கு பல வழிகளில் பணம் சேர்ந்து கொண்டேன்.

குபேரன் சிலை

இந்த உலகில் உள்ள ஒட்டு மொத்த செல்வங்களுக்கும் சொந்தக்காரி லட்சுமி தாயார் என்றால் இந்த செல்வங்களை எல்லாம் பாதுகாக்கும் அதிபதி குபேரர் ஆவார். அதனால் செல்வங்களின் அதிபதி குபேரரின் சிலையை வாங்கி உங்கள் வீட்டின் வடக்கு பக்கம் பார்த்தவாறு இந்த திசையில் வைத்தால் உங்கள் வீட்டில் உள்ள பணம் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

சங்கு

பொதுவாக நம் சாதாரணமாக ஒரு சங்கை எடுத்து அதை காதில் வைத்து கேட்டாலே அதிலிருந்து ஓம் என்ற ஒலி வருவதை நம்மால் கேட்க முடியும். அப்படி அந்த சங்கில் இருந்து வெளிவரும் ஒலியானது கெட்ட சக்திகளை அழிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். மேலும் சங்கு லட்சுமி கடாட்சம் நிறைந்த ஒரு பொருள் என்பதாலும் சங்கை வீட்டின் பூஜை அறையில் வைத்து இருந்தால் உங்கள் வீடு செழிப்பதோடு உங்கள் வீட்டில் சகல செல்வங்களும் சேர்ந்து கொண்டே இருக்கும்.