ருசியான பன்னீர் பட்டர் மசாலாவை இப்படி செய்து கொடுத்து பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள்!

- Advertisement -

பன்னீர் பட்டர் மசாலா வட இந்தியாவில் பேமசாக இருந்தாலும் தற்போது தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலமான ஒரு உணவாக உள்ளது. முதல்ல ஹோட்டல்ல மட்டுமே கிடைத்து இருந்த இந்த பன்னீர் பட்டர் மசாலாவை இப்போ எல்லாரும் வீட்லையே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

-விளம்பரம்-

சப்பாத்தி நான் இட்லி தோசை இது எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடிஷா இந்த பன்னீர் பட்டர் மசாலா இருக்கும். எப்போ பார்த்தாலும் தேங்காய் சட்னி சாம்பார் தக்காளி சட்னி இந்த மாதிரியே செய்யாம கொஞ்சம் டிஃபரண்டா பன்னீர் பட்டர் மசாலா செஞ்சா எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான டிஷ்ஷா இருக்கும்.

- Advertisement -

குழந்தைகளும் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பன்னீர் பட்டர் மசாலாவில் இருக்க பண்ணீரும் பட்டரும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. என்னதான் இப்போ பன்னீர் பட்டர் மசாலாவை எல்லார் வீட்டுலயும் செய்ய ஆரம்பிச்சிட்டாலும் இன்னும் அந்த ஹோட்டல்ல செய்ற மாதிரி வரலன்னு நிறைய பேரு பீல் பண்ணுவாங்க அவங்களுக்காகவே இன்னைக்கு ஹோட்டல் ஸ்டைலில் எப்படி பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி பாக்க போறோம். வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

Print
No ratings yet

பன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala In Tamil

சப்பாத்தி நான் இட்லி தோசை இது எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான சைடிஷா இந்த பன்னீர் பட்டர் மசாலா இருக்கும். எப்போ பார்த்தாலும் தேங்காய் சட்னி சாம்பார் தக்காளி சட்னி இந்த மாதிரியே செய்யாம கொஞ்சம் டிஃபரண்டா பன்னீர் பட்டர் மசாலா செஞ்சா எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான டிஷ்ஷா இருக்கும். இன்னைக்கு ஹோட்டல் ஸ்டைலில் எப்படி பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி பாக்க போறோம். வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: mumbai
Keyword: paneer butter masala
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 350 கிராம் பன்னீர்
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • இஞ்சி சிறிதளவு
  • 12 பற்கள் பூண்டு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 2 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • 10 முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் முந்திரி பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • அதனை நன்றாக ஆரவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அதே கடாயில் பட்டர் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சிறிதளவு சேர்த்து வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்
  • மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு பன்னீர் துண்டுகளை போட்டு லேசாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • அந்த பன்னீர் துண்டுகளை கொதிக்கும் மசாலாவில் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைத்த இறக்கினால் அருமையான பன்னீர் பட்டர் மசாலா தயார். நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்

Nutrition

Serving: 250g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg