அடுத்தமுறை பன்னீர் வாங்கினால் ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை வீட்டில் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள், இந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை செய்து பாருங்கள் பண்ணி பார்க்கலாம். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு , ஜின்ஜர் பனீர் ஃப்ரை செய்து கொடுத்தால் உணவு அருமையானதாக மாறும்.

-விளம்பரம்-

இது போன்று ஜின்ஜர் பனீர் ஃப்ரை மொறு மொறுனு இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். பனீரில் அதிக அளவு ஜிங்க் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. பனீரில் புரதம் நிறைந்துள்ளது, இது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும். குழந்தைகளுக்கு இது போன்று செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

சைவ சாப்பாட்டை விரும்பி உண்பவர்களுக்கு எல்லாம் இந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை இதெல்லாம் மிகப் பெரிய ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அசைவம் வைத்து சமைக்கும் பல சமையல்களை அதே சுவையுடன் மனத்துடனும் செய்ய இந்த இரண்டு பொருட்களும் இருந்தாலே போதும். அந்த வகையில் நல்ல ஒரு ஜின்ஜர் பனீர் ஃப்ரை அசைவ சமையல் விட மிஞ்சும் சுவையிலே இதை செய்து விடலாம். ஜின்ஜர் பனீர் ஃப்ரை சப்பாத்தி அல்லது கலந்த சாதத்திற்கு நல்ல ஒரு இணை உணவாக இருக்கும். அந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை எப்படி செய்வது என்பதனை பற்றிய குறிப்பு பதிவு தான் இது. வாங்க அந்த பன்னீர் கிரேவி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க.

Print
No ratings yet

ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை | Ginger Paneer Fry Recipe In Tamil

சைவ சாப்பாட்டை விரும்பி உண்பவர்களுக்கு எல்லாம் இந்தஜின்ஜர் பனீர் ஃப்ரை இதெல்லாம் மிகப் பெரிய ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அசைவம்வைத்து சமைக்கும் பல சமையல்களை அதே சுவையுடன் மனத்துடனும் செய்ய இந்த இரண்டு பொருட்களும்இருந்தாலே போதும். அந்த வகையில் நல்ல ஒரு ஜின்ஜர் பனீர் ஃப்ரை அசைவ சமையல் விட மிஞ்சும்சுவையிலே இதை செய்து விடலாம். ஜின்ஜர் பனீர் ஃப்ரை சப்பாத்தி அல்லது கலந்த சாதத்திற்குநல்ல ஒரு இணை உணவாக இருக்கும். அந்த ஜின்ஜர் பனீர் ஃப்ரை எப்படி செய்வது என்பதனை பற்றியகுறிப்பு பதிவு தான் இது. வாங்க அந்த பன்னீர் கிரேவி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, sidedish
Cuisine: tamilnadu
Keyword: Ginger Paneer Fry
Yield: 4
Calories: 615kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 300 கிராம் பனீர்
 • 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
 • 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
 • உப்பு தேவைக்கு
 • 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
 • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
 • 1 பெரிய வெங்காயம் நறுக்கவும்
 • 1 தக்காளி நறுக்கவும்
 • மல்லித்தழை சிறிது

செய்முறை

 • பனீரைசிறிய சதுர துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்கள் வேகவிட்டு பனீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அப்பொழுது பனீர் மிருதுவாக இருக்கும்.
 • தவாவில்1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பனீர் நன்கு பொன்னிறமாக வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
 • அதேதவாவில் மீதியுள்ள நல்லெண்ணெயை விட்டு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும்.
 • உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூளை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
 • பின்பு பனீர் சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றும்வரை கிளறி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.

Nutrition

Serving: 300g | Calories: 615kcal | Carbohydrates: 234g | Fat: 12g | Cholesterol: 32mg | Sodium: 1029mg | Potassium: 1029mg | Fiber: 2.4g | Calcium: 32mg