Home சைவம் புதிதான சுவையில் சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு செய்யலாம் வாங்க

புதிதான சுவையில் சூப்பரான பப்பாளிக்காய் கூட்டு செய்யலாம் வாங்க

நம்ம எல்லாருமே பப்பாளி பழம் சாப்பிட்டு இருப்போம் அது நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. முக்கியமா பெண்களுக்கு பப்பாளி பழம் ரொம்பவே நல்லது. கர்ப்பிணி பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களுமே பப்பாளி பழம் சாப்பிடலாம். முகத்துக்கு பளபளப்பு கொடுக்கக் கூடியது தான் இந்த பப்பாளி பழம். அதோட சாப்பிடுவதற்கும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.

-விளம்பரம்-

ஒரு சிலர் பப்பாளி பழம் மட்டும்தான் சாப்பிட்டுருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளி காய் வச்சு வெரைட்டியான ஏதாவது ஒரு உணவு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளிக்காய் வச்சு சுத்தமா எதுவுமே சமைச்சிருக்க மாட்டாங்க அது எப்படி இருக்கணும்னு கூட சில பேருக்கு தெரியாது. அவங்களுக்காகவே இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல பப்பாளிக்காய் கூட்டு செய்ய போறோம். ஒருவேளை உங்களுக்கு பப்பாளி காய் கிடைச்சுது அப்படின்னா அது பழுக்குற வரைக்கும் வெயிட் பண்ண முடியலன்னா டக்குனு பப்பாளிக்காய் வச்சு இந்த கூட்டு செஞ்சிடுங்க சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதற்கு செம டேஸ்டா இருக்கும்.

இந்த பப்பாளி காய் கூட பருப்புலாம் சேர்த்து வைக்கும் போது டேஸ்ட் இன்னுமே அதிகமாக இருக்கும் என்று சொல்லலாம். வீட்ல காய்கறிகள் இல்லாதப்போ இந்த பப்பாளிக்காய் கிடைத்தது என்றால் அதை வைத்து கூட்டு செய்து சாப்பிடலாம்.ரொம்பவே அருமையா இருக்கக்கூடிய இந்த பப்பாளிக்காய் கூட்ட குழந்தைகளுக்கும் நீங்க கொடுக்கலாம் அவங்களுமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அருமையான பப்பாளிக்காய் கூட்டு டேஸ்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
4 from 1 vote

பப்பாளிக்காய் கூட்டு | Papaya Kootu Recipe In Tamil

ஒருசிலர் பப்பாளி பழம் மட்டும்தான் சாப்பிட்டுருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளி காய் வச்சு வெரைட்டியான ஏதாவது ஒரு உணவு சாப்பிட்டு இருப்பாங்க ஆனா ஒரு சிலர் பப்பாளிக்காய் வச்சு சுத்தமா எதுவுமே சமைச்சிருக்க மாட்டாங்க அது எப்படி இருக்கணும்னு கூட சில பேருக்கு தெரியாது. அவங்களுக்காகவே இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல பப்பாளிக்காய் கூட்டு செய்ய போறோம். ஒருவேளை உங்களுக்கு பப்பாளி காய் கிடைச்சுது அப்படின்னா அது பழுக்குற வரைக்கும் வெயிட் பண்ண முடியலன்னா டக்குனு பப்பாளிக்காய் வச்சு இந்த கூட்டு செஞ்சிடுங்க சாதத்துக்கு சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடுவதற்கு செம டேஸ்டா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Papaya Kootu
Yield: 4
Calories: 232kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் நறுக்கிய பப்பாளிக்காய்
  • 1/2 கப் பாசிப் பருப்பு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு குக்கரில் நறுக்கிய பப்பாளிக்காய் சேர்த்து அதனுடன் பாசிப்பருப்பு பச்சை மிளகாய் ஒன்று, தக்காளி உப்பு அனைத்தும் சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • இரண்டு விசில் வந்த பிறகு குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு ஐந்து நிமிடங்கள் இதனை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் அனைத்தும் சேர்த்து தாளித்து கொதிக்கின்ற பப்பாளி காயுடன் சேர்த்து விடவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பப்பாளிக்காய் கூட்டு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 232kcal | Carbohydrates: 256g | Cholesterol: 1mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU

இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான சௌசௌ மோர்க்குழம்பு ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!