விருதுநகர் ஸ்பெஷல் பரோட்டா இப்படி சுலபமாக வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!

viruthu nagar parotta
- Advertisement -

விருதுநகர் பரோட்டா இது போன்று செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பரோட்டா செய்து சிக்கன் சால்னா அல்லது மட்டன் சால்னா இத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

எப்படி இந்த பரோட்டா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
parotta
Print
No ratings yet

பரோட்டா | Parotta Recipe In Tamil

விருதுநகர் பரோட்டா இது போன்று செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பரோட்டா செய்து சிக்கன் சால்னா அல்லது மட்டன் சால்னா இத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
எப்படி இந்த பரோட்டா செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time2 hours 10 minutes
Active Time10 minutes
Total Time22 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: parotta, பரோட்டா
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ மைதா
  • 2 சிட்டிகை ஆப்பசோடா
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதல் அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 2 குழிக்கரண்டி எண்ணெய், ஆப்ப சோடா போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.
  • அடுத்து பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் ஊற விடவும் உருண்டைகளை இரண்டு மணி நேரம் வைத்து இருக்கவும்.
  • பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை எடுத்து பலகையில் வைத்து விசுறவும்.
  • விசிறிய மாவை சுற்றி வைக்கவும். எல்லா உருண்டைகளையும் அதே மாதிரி செய்யவும்.
  • பிறகு சுற்றிய மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து ஒரு அழுத்து அழுத்தவும். பின் அடுப்பில் ஒரு நாண்ஸ்டிக் தவாவை போட்டு எண்ணெய் ஊற்றி அதில் விசிறி வைத்த பரோட்டாவைப் போட்டு இருபக்கமும் திருப்பி போட்டு சுடவும்.
  • பரோட்டாவை தட்ட வேண்டாம்.