ஆந்திர மாநிலத்தில் மிகப் பிரபலமாக சொல்லப்படும் வேர்க்கடலை பொடி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட இது. சுடசுட சாதத்தோடு இந்த பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து இட்லி பொடி போல தொட்டும் சாப்பிடலாம். நேரத்தைக் கடத்தாமல் ஆந்திரா ஸ்பெஷல் வேர்க்கடலை பொடி சாதம் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம் வாங்க.
சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த வேர்க்கடலை பொடி உங்களிடம் இருந்தால் சட்டுன்னு இப்படி உதிரி உதிரியான சாதம் வடித்து முருங்கைக்கீரை சாதம் ட்ரை பண்ணி பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. சத்து மிகுந்த இந்த வேர்க்கடலை பொடி சாத ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வேர்க்கடலை பொடி சாதம் | Peanut Podi Rice In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சரிசி
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- உப்பு தேவையான அளவு
- 1/4 கப் வறுத்த வேர்க்கடலை
தாளிக்க
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- கறிவேப்பிலை சிறிதளவு
- 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
வறுத்து பொடிக்க:
- 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 டேபி ள்ஸ்பூன் கொப்பரை துருவல்
- 4 காய்ந்த மிளகாய்
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 2 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- பச்சரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்து வையுங்கள். வேர்க்கடலையை தோல் நீக்குங்கள்.
- வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சிவக்க வேர்க் கடலையையும் வறுத்து, அத்துடன் சேர்த்து பொடித்துக்கொள்ளுங்கள்.
- கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் சேர்த்து, அத்துடன் நெய், வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
- வித்தியாசமான வேர்க்கடலை பொடி சாதம் சுவை அசத்தும்.