ருசியான பட்டாணி சீரக சாதம் காலை டிபன் பாக்ஸ் ரெசிபியாக இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

இல்லத்தரசிக்கு தினசரி மதியம் பள்ளிக்கு என்ன வித்யாசமாகவும், சுவையானதாகவும் கொடுக்கலாம் என்ற குழப்பமே பெரியதாக இருக்கும்.. அவர்களுக்கு இந்த சாதம் வகை நிச்சயம் கை கொடுக்கும். பட்டாணியில் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான புரத சத்து அதிகம் உள்ளது. இந்த சாதம்  செய்வதற்கு மிகவும் எளிது மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதும். காலை வேலையில் பரபரப்பாக வேலை செய்யும் நேரத்தில், இந்த சாதம் சட்டென செய்து விடலாம். சரி , வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

பட்டாணி சீரக சாதம் | Peas Jeera Rice Recipe In Tamil

இல்லத்தரசிகளுக்கு,தினசரி மதியம் பள்ளிக்கு என்ன வித்யாசமாகவும், சுவையானதாகவும் கொடுக்கலாம் என்ற குழப்பமே பெரியதாக இருக்கும்.. அவர்களுக்கு இந்த சாதம் வகை நிச்சயம் கை கொடுக்கும். இந்த சாதம்  செய்வதற்குமிகவும் எளிதுமற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதும். காலை வேலையில் பரபரப்பாக வேலை செய்யும் நேரத்தில், இந்த சாதம் சட்டென செய்து விடலாம். சரி , வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Yield: 4
Calories: 198kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கப் பாசுமதி அரிசி
  • 2 கப் பச்சை பட்டாணி
  • 3 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • பட்டை சிறிது
  • 3 டேபிள்ஸ்பூன் நெய்
  • உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை

  • அரிசியைக் நன்றாக கழுவி 40 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரைசூடேற்றி, அதில் நெய்யை விட்டு, சீரகம், பட்டை இலை இரண்டையும் போட்டு சில விநாடிகள் வதக்கிவிடவும்.
  • பின் அதனுடன் பச்சை பட்டாணியைப் போட்டு சில விநாடிகள் வதக்கிய பின், ஊற வைத்த அரிசியை,நீரை வடிகட்டி விட்டு சேர்க்கவும்.
  • சிறிது கிளறி விட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

Nutrition

Serving: 250g | Calories: 198kcal | Carbohydrates: 30.3g | Protein: 4.2g | Fat: 6.7g | Fiber: 3.6g | Calcium: 12.3mg | Iron: 0.7mg
- Advertisement -