இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். அதனால் அனைவருமே தங்களது தினசரி உணவில் ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளில் முழுக்க முழுக்க சத்துக்கள் நிரம்பியுள்ளது. அதிலும் கொடிக்காய்களில் உள்ள சத்துகள் எண்ணிலடங்காதவை. அதில் சில காய்கறிகள் அதன் தோல்களிலும் நிறைந்த சத்துகளை கொண்டுள்ளன.
நீங்கள் இதுவரை தேங்காய் துவையில், எள்ளு துவையல், கடலை துவையல் உள்ளிட்ட புகழ்பெற்ற துவையல் வகைகளை நீங்கள் இதுவரை ருசித்து பார்த்தது உண்டு. ஆனால், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல்களில் ஒன்றான பீர்க்கங்காய் துவையல், ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ள உணவு பொருளாகும். பீர்க்கங்காயில் கூட்டு சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு கூட பீர்க்கங்காய் சட்னி, பீர்க்கங்காய் துவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்க.
பீர்க்கங்காய் துவையல் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல் வகை. இது இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறி வகையாகும். பீர்க்கங்காய் சட்னி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை சேர்க்கும். அந்த வகையில் இன்று பீர்க்கங்காய் தோலை வைத்து எப்படி சுவையான துவையல் செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
பீர்க்கங்காய் தோல் துவையல் | Peerkangai Thol Thuvaiyal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தாளிப்பு கரண்டி
தேவையான பொருட்கள்
- 2 பீர்க்கங்காய்
- 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 பெரிய வெங்காயம்
- 5 வர மிளகாய்
- 1 கொட்டை புளி
- 1/4 கப் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க :
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 வர மிளகாய்
செய்முறை
- முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவிக் தோல் சீவி அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
- பின் பீர்க்கங்காய் தோல் சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
- இவை ஆறியதும் ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு உப்பு, புளி, தேங்காய் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு மற்றொரு முறை கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்த்து கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீர்க்கங்காய் தோல் துவையல் தயார்.
- இது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். கொஞ்சம் கெட்டியாக எடுத்து வைத்துக்கொண்டால் சாதத்திற்கு பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வாய்க்கு ருசியா முடக்கறுத்தான் கீரை துவையல், இப்படி எளிமையான முறையில் செய்து சாப்பிட்டு பாருங்க!