நண்டு குழம்பு தோற்று போய்விடும் அளவுக்கு ருசியான இந்த மிளகு சால்னா செய்து பாருங்க!

- Advertisement -

காய்கறிகள், கறி எதுவும் சேர்க்காத இந்த மிளகு சால்னா பரோட்டா மட்டும் அல்லாமல் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே அவ்வளவு அருமையான காம்பினேஷனாக இருக்கப் போகிறது. ரொம்ப ரொம்ப சுலபமாக வீட்டிலேயே மிளகு சால்னா  எப்படி தயாரிக்கலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி நாம் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

ரோட்டு கடை பிளைன் சால்னா மிகவும் ருசியாக இருக்கும். அதே இந்த சால்னாவில் மிளகு சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மிளகு சேர்த்து சால்னா செஞ்சு பாருங்க வேற லெவல் டேஸ்ட். t சில ரோட்டு கடைகளில் இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பிளைன் சால்னா கிடைக்கும். அதே போல் மிளகு சேர்த்து செய்து பாருங்கள், பார்ப்பதற்கு கொஞ்சம் பச்சை நிறமாக தான் இருக்கும்.

- Advertisement -

காரம் தூக்கலாக வாசம் தூக்கலாக சாப்பிடவே ஒரு தனி ருசி இருக்கும். இப்படிப்பட்ட சால்னாவை நம்முடைய வீட்டில் முயற்சி செய்து பார்த்தால், அனைவரும் பாராட்டி விடுவார்கள் . .இதை சூடான சோற்றில் ஊற்றி, சிறிது நெய்விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். மிளகு சால்னா செய்வது எப்படி என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Print
4.50 from 2 votes

மிளகு சால்னா | Pepper Salna Recipe In Tamil

ரோட்டு கடை பிளைன் சால்னா மிகவும் ருசியாகஇருக்கும். அதே இந்த சால்னாவில் மிளகு சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த மிளகு சேர்த்து சால்னா செஞ்சு பாருங்க வேற லெவல் டேஸ்ட். t சில ரோட்டு கடைகளில் இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பிளைன் சால்னா கிடைக்கும்.அதே போல் மிளகு சேர்த்து செய்து பாருங்கள், பார்ப்பதற்கு கொஞ்சம் பச்சை நிறமாக தான் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Pepper Salna
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 புளி எலுமிச்சை அளவு
  • 50 கிராம் மிளகு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • 8 இலை கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பையும், மிளகையும் போடவும்.
  • உளுந்து லேசாக சிவந்து மிளகு வெடிக்க ஆரம்பிக்கும்போது பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் போட்டு லேசாக வறுத்து, புளியை அப்படியே அதில்போட்டு கறிவேப்பிலையும் போட்டு வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மிக்ஸியில் 2 டம்ளர் தண்ணீர் இத்துடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்ஊற்றி கடுகு போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதை ஊற்றவும்,
  • உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக கொதித்து வரும்போது இறக்கி பரிமாறவும்.
  • சுவையான மிளகு சால்னா தயார்

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Saturated Fat: 5.8g | Monounsaturated Fat: 6.6g | Cholesterol: 88mg | Vitamin A: 5.37IU | Calcium: 2.6mg | Iron: 21mg