உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பச்சை பயிறு வைத்து ஆரோக்கியமான மொறுமொறு தோசை ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை இப்படி ருசியாக செய்து கொடுக்கும் போது நிச்சயமாக அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். வாரத்தில் ஒருநாள் இந்த ரெசிபியை உங்க வீட்டில் செய்வது நல்லது. கிரைண்டரில் கூட மாவு அரைக்க வேண்டாம். மிக்சி ஜாரில் போட்டாலே போதும். சுலபமா தோசையை சுட்டு எடுக்கலாம். அந்த ஹெல்தி பிரேக்பாஸ்ட் ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோமா.
பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு உங்களுடைய ஆரோக்கியமும் வலுவாக அமையும். அந்த வகையில் தினமும் ஒரே வகையான தோசையை சுட்டு போரடித்து போன உங்களுக்கு அரிசி, உளுந்து எதுவும் சேர்க்காமல் வெறும் பச்சை பயறை கொண்டு செய்யப்படும் இந்த பச்சை பயறு தோசை மாவு ரொம்பவே வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். அலாதியான சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த பச்சை பயறு தோசை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.
பெசரட் தோசை | Pesarattu Dosa Recipe In Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 3/4 ஆழாக்கு முழு பச்சை பயிறு
- 1/2 கப் பார்லி
- 5 பச்சை மிளகாய்
- 1 மீடியம் துண்டு இஞ்சி
- 1 பல் பூண்டு
செய்முறை
- முழு பயிரையும் பார்லியையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் போட்டு மிக்சியில் நைசாக அரைத்து எடுக்கவும்.
- பிறகு அடுப்பில் தோசை கல்லை போட்டு அதில் இந்த மாவிலிருந்து ஒரு பெ ரிய கரண்டி மாவு எடுத்து மீடியம் சைஸ் ஆக தோசையை வார்க்கவும்.
- அடுப்பை சின்ன தீயில் வைத்து சுடவும் கோல்டன் பிரவுன் ஆன பிறகு எடுத்துசாப்பிட சுவையாக இருக்கும்.