சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட ருசியான பிரண்டை தொக்கு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

இப்போது நிலவும் சூழலில் கால் வலித்தால் மாத்திரை, உடம்பு வலித்தால் மாத்திரை என நாம் அனைவரும் மருந்துகடைகளில் வரிசையில் நிற்கிறோம். ரேசன் கடைகளில் தான் வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவோம். இப்போது மருந்துகடைகளில் வரிசையில் நின்று மருந்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

-விளம்பரம்-

இதற்கெல்லாம் காரணம் நம் முன்னோர்களின் வழியில் இருந்து பின்வாங்கியது தான். அப்போதெல்லாம், வாய்ப்புண் வந்தால் அகத்திகீரை, வயிறு சரியில்லை என்றால் மாதுளம்பிஞ்சு, உடல் பருமனானால் வெள்ளை பூசணி என உணவை மருந்தாக கடைபிடித்து வந்தார்கள்.

- Advertisement -

மருத்துவ குணம் நிறைந்த இந்த பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அஜீரண கோளாறு, வயிற்று பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பிரண்டை தொக்கை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இந்த தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பிரண்டை தொக்கு | Pirandai Thokku Recipe In tamil

நம்முன்னோர்களின் வழியில் இருந்து பின்வாங்கியது தான். அப்போதெல்லாம், வாய்ப்புண் வந்தால் அகத்திகீரை, வயிறு சரியில்லை என்றால் மாதுளம்பிஞ்சு, உடல் பருமனானால் வெள்ளை பூசணி என உணவை மருந்தாககடைபிடித்து வந்தார்கள். மருத்துவகுணம் நிறைந்த இந்த பிரண்டைத் துவையலை வாரத்திற்கு இரண்டு நாளாவது நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அஜீரண கோளாறு, வயிற்று பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பிரண்டை தொக்கை அடிக்கடி செய்து சாப்பிடலாம். இந்த தொக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time9 minutes
Course: chutney, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Pirandai Thokku
Yield: 4
Calories: 252kcal

Equipment

 • 1 கடாய்
 • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

 • 1/2 கிலோ பிரண்டை
 • 1/4 கிலோ சின்ன வெங்காயம்
 • 100 கிராம் பூண்டு
 • 10 காஷ்மீர் மிளகாய் வற்றல்
 • 8 குண்டு வரமிளகாய்
 • 100 கிராம் புளி
 • 25 கிராம் வெல்லம்
 • 2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
 • கல் உப்பு தேவையான அளவு
 • 1/2 லிட்டர் நல்லெண்ணெய்
 • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

 • முதலில் பிரண்டையை சுத்தம் செய்து தோல் சீவி கழுவி சுத்தமான துணியால் துடைத்து கொள்ளவும். பின் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
 • பின் பிரண்டையை சேர்த்து வதக்கவும். அவற்றுடன் வரமிளகாய், காஷ்மீர் மிளகாய் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 • பின் புளியை ஊற வைத்து கரைத்துஎடுத்துக்கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
 • பின் கரைத்த புளிக்கரைசல் மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மிதமான தீயில் கைவிடாமல் வதக்கவும்.அவை வதங்கியதும் வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.
 • பின் எண்ணெய் பிரிந்து வரும் போது தாளித்த எண்ணெய் கலவையை ஊற்றி நன்கு கிளறவும். அவ்வளவுதான் சுவையான, ஆரோக்கியமான பிரண்டை தொக்கு ரெடி.

Nutrition

Serving: 100g | Calories: 252kcal | Carbohydrates: 13g | Sodium: 353mg | Calcium: 12mg