உங்க வீட்ல நிறைய பிஸ்தா இருந்தா இந்த மாதிரி பிஸ்தா குல்பி செஞ்சு பாருங்க!

- Advertisement -

பொதுவா சின்ன குழந்தைங்க ஒரு விஷயத்துக்கு கேட்டு ரொம்ப அடம் பிடிக்கிறாங்கன்னா அது ஐஸ்க்ரீம் தான். ஐஸ்கிரீமையும் சின்ன குழந்தைகளையும் பிரிக்கவே முடியாது என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம்  ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா குழந்தைகளுக்கு சளி பிடித்து விடும் அப்படின்னு நம்ம அவங்களுக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுக்காமலே இருப்போம்.

-விளம்பரம்-

‌ ஆனா மத்த குழந்தைகள் சாப்பிடுவதை பார்த்து குழந்தைகள் அட புடிச்சு அழுவாங்க அந்த மாதிரி சமயத்துல கடைகளில் போய் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காம வீட்டிலேயே சூப்பரான பிஸ்தா வச்சு குல்பி செஞ்சு கொடுக்கலாம். குல்பி கடைகளை வாங்குனா தான டேஸ்டா இருக்கும் அப்படின்னு நினைப்பீங்க கிடையவே கிடையாது சூப்பரான குல்பி நம்மளால வீட்டிலேயே செய்ய முடியும். இதுக்கு முக்கியமா பால் இருந்தா மட்டும் போதும் வேற நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. பாலும் பிஸ்தாவும் வச்சு சூப்பரான டேஸ்ட்ல நம்மளால இந்த குல்பி ஐஸ் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

- Advertisement -

இப்ப வேற சம்மர் வரப்போகுது இந்த சம்மர்ல குழந்தைங்களிலிருந்து பெரியவங்க வரைக்கும் ஏதாவது ஜில்லுனு குடிச்சா நல்லா இருக்கும் அப்படின்னு தான் யோசிப்பாங்க. அவங்களுக்காகவே நீங்க இந்த குல்பி ஐஸ் ரெடி பண்ணி கொடுக்கலாம் கடைகளில் போய் ஆரோக்கியம் இல்லாத ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடாமல் இருப்பார்கள். வாயில வச்சாலே கரையக்கூடிய அளவுக்கு இதோட டேஸ்ட் இருக்கும் சாப்பிட்டு முடிச்ச பின்னாடியும் நாக்குல அந்த டேஸ்ட் இருந்துக்கிட்டே தான் இருக்கும் அந்த அளவுக்கு இந்த பிஸ்தா குல்பி டேஸ்ட் செம்ம அருமையா இருக்கும். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த கலக்கல் ஆன குளு குளு பிஸ்தா குல்பி எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

பிஸ்தா குல்பி | Pista Kulfi Recipe In Tamil

மத்த குழந்தைகள் சாப்பிடுவதை பார்த்து குழந்தைகள் அட புடிச்சு அழுவாங்கஅந்த மாதிரி சமயத்துல கடைகளில் போய் ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்காம வீட்டிலேயே சூப்பரான பிஸ்தா வச்சு குல்பி செஞ்சு கொடுக்கலாம். குல்பி கடைகளை வாங்குனா தான டேஸ்டா இருக்கும் அப்படின்னு நினைப்பீங்க கிடையவே கிடையாது சூப்பரான குல்பி நம்மளால வீட்டிலேயே செய்ய முடியும். இதுக்கு முக்கியமா பால் இருந்தா மட்டும் போதும் வேற நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. பாலும் பிஸ்தாவும் வச்சு சூப்பரான டேஸ்ட்ல நம்மளால இந்த குல்பி ஐஸ் வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Pista Kulfi
Yield: 4
Calories: 391kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 லிட்டர் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1 பிரட் துண்டு
  • 2 டேபிள்ஸ்பூன் பிஸ்தா பொடி
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டீஸ்பூன் கார்ன்பிளவர் மாவு

செய்முறை

  • முதலில் பிஸ்தா பருப்புகளை பொடியாக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • பிரட்டின் ஓரங்களை விட்டுவிட்டு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு பால் மற்றும் கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு கனமான பாத்திரத்தில் மீதி இருக்கும் பாலை ஊற்றி நன்றாக காய்ச்சவும்
  • பால் பாதியாக சுண்டி வரும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும்
  • அதன் பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுது சர்க்கரை பிஸ்தா பொடி ஏலக்காய் பொடி அனைத்தையும் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்
  • கெட்டியாவதற்கு முன்பாக அதனை இறக்கி விட வேண்டும். நன்றாக ஆறவைத்து கொள்ளவும்
  • நன்றாக ஆறிய பிறகு குல்பி அச்சு அல்லது உங்களுக்கு பிடித்தமான டப்பாவில் போட்டு ஃப்ரீஸருக்குள் வைத்து ஏழு மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான பிஸ்தா குல்பி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 391kcal | Carbohydrates: 20g | Sodium: 312mg | Potassium: 326mg | Calcium: 15mg

இதையும் படியுங்கள் : இனி வரும் கோடைக்கு ஏற்ற குளு குளு மாம்பழ குல்பி இப்படி வீட்டிலயே இப்படி செஞ்சி பாருங்கள்!