Home ஆன்மிகம் பித்ரு தோஷம் யாரையெல்லாம் பாதிக்கும் ? இந்த பித்ரு தோஷம் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்...

பித்ரு தோஷம் யாரையெல்லாம் பாதிக்கும் ? இந்த பித்ரு தோஷம் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் ?

தோஷங்கள் பலவிதம் அதில் பித்ரு தோஷத்திற்கே முதலிடம்.ஜாதகத்தில் பல தோஷங்கள் இருக்கும் ராகு தோஷம் , கேது தோஷம், செவ்வாய் தோஷம் , களத்திர தோஷம், கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் இப்படி பல தோஷங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் விட அதிக பாதிப்பை கொடுப்பது பித்ரு தோஷம் அதாவது முன்னோர்களின் சாபம். அதாவது நம் முன்னோர்கள் செய்த பாவங்கள்  ஏழு தலைமுறை வரை தொடரும் . எப்படி நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தில் நமக்கு பங்கு இருக்கிறதோ அதேபோல அவர்கள் செய்த பாவ  புண்ணியத்தில் பங்கு இருக்கிறது. அவர்கள் செய்த கொடூர பாவங்கள், அவர்கள் வாங்கிய சாபங்கள் போன்றவற்றிலும் நமக்கு பங்கு கிடைக்கிறது . இதையே பித்ருக்களின் தோஷம் என்று கூறுகிறோம். 

-விளம்பரம்-

பித்ரு தோஷம் உள்ளவர்கள் பரிகாரங்கள், பூஜைகள் செய்தும் தோஷத்தை போக்கிக் கொள்ளலாம். ஆயினும் ஒரு முறை செய்வதால் மட்டும் முழு பலன் கிடைக்காது. வருடா வருடம் இறந்த மூதாதையர்களுக்கு அதாவது நம் முன்னோர்களுக்கு  தர்ப்பணம் முறையாக செய்து தோஷத்தில் விடுபட வேண்டும்.  பித்ருக்களின் தோஷம் என்பது கடவுள்களின் வாழ்த்துக்களை கூட தடுத்து நிறுத்தும் சக்தி உடையது . ஆகையால் நம் மனக்குறைகளை எல்லாம் கடவுளிடம் ஒப்படைத்து விட்டோம், வேண்டி விட்டோம் அவர் அருள் கொடுத்து விட்டதால் நாம் வேண்டிய வரங்கள் கிடைத்து விடும் என்று நினைக்க முடியாது. காரணம் நமக்கு முன்னோர்களின் சாபம் அதாவது பித்ரு தோஷம் இருந்தால் கடவுள்களின் வரங்களை கூட தடுத்து நிறுத்தி விடும் ஆற்றல் பித்ரு தோஷத்திற்கு இருக்கிறது

பித்ருதோஷம் என்றால் என்ன?

பித்ரு என்பது ஒருவருடைய தந்தை அல்லது தந்தையின் மூதாதையர்கள், ஏழு தலைமுறை வரை உள்ள மூதாதையர்களை குறிக்கும். ஒருவர் செய்யும் தவறு அவருடைய ஏழு தலைமுறைகளையும் தாக்கும் என்பது நியதி. நம் முன்னோர்கள் அவர்கள் ஏன்? தன்  வாரிசுகளை தண்டிக்க வேண்டும் , சாபம் விட வேண்டும் இவ்வாறெல்லாம் யோசிப்போம் . கர்ம வினையின் பயனை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும் . ஆனால் இது பித்ருக்கள் நம் முன்னோர்கள் பெற்ற பாவங்கள், சாபங்களின் விளைவு நம்மை வந்து சேர்கிறது. இதன் பலனாக ஒருவரது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அதனால் ஏற்படும் மன உளைச்சல், நிம்மதியின்மை ஆரோக்கியமின்மை போன்றவையே பித்ரு தோஷம் என்கின்றோம்.

பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம்?

ஒருவருக்கு பித்ரு தோஷம் இருப்பதை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. பித்ரு தோஷம் உள்ளவர்கள் வாழ்வில் நிம்மதி இருக்காது. திருமணம் தடை , குழந்தையின்மை கருச்சிதைவு , வளர்ச்சிக்குன்றிய குழந்தை, மன வளர்ச்சி குன்றிய குழந்தை, கணவன் மனைவி ஒற்றுமையின்மை, குடும்பத்தில் மகிழ்வின்றி இருத்தல்,எப்போதும் சண்டை சச்சரவுடன் இருத்தல், அடிக்கடி ஆரோக்கிய குறைவின்மை இது போன்றவைகள் ஒரு குடும்பத்தில் இருந்தால் அவர்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்ற அர்த்தம்.

பித்ருதோஷத்தின் வகைகள்

பித்ரு தோஷம் வெறும் முன்னோர்கள் சாபத்தினால் மட்டும் வருவதில்லை வேறு சில காரணங்களால் ஏற்படும் குறைபாடுகளையும் பித்ரு தோஷம் என்று அழைக்கிறோம்.

-விளம்பரம்-

1. நம் முன்னோர்களின் பிரிந்த ஆன்மாவிற்கு முறையாக தர்ப்பணம் செய்யாமல் இருந்தல்

2. நம் முன்னோர்களில் யாரோ ஒருவர் பிறருடைய சொத்திற்கோ அல்லது அடுத்தவர்களின் உடமைக்கும் ஆசைப்பட்டு அவர்களை மனதாலும், உடலாலும் சித்திரவதை செய்வதும் அதனால் மற்றவருக்கு ஏற்படும் மன வலி பிற்காலத்தில் சாபமாக மாறி அது அவர்களது சந்ததியினை பாதிக்கிறது

3. வயதான தாய் தந்தை அல்லது தாத்தா பாட்டிகளை முறையாக கவனிக்காமல் உணவு ஒழுங்காக கொடுக்காமல் அவர்கள் மனம் வருந்தும் அளவிற்கு நடந்து கொண்டால் அவர்களின் எண்ணமும் நமக்கு சாபமாக மாறும்.

-விளம்பரம்-

பித்ரு தோஷ பரிகாரம்

1.பித்ரு தோஷத்திற்கு பரிகாரமாக நம் முன்னோர்கள் உயிர் நீத்த திதி அல்லது மாதம் மாதம் வரும் அமாவாசை அல்லது வருடத்திற்கு ஒரு முறை ஆடி, புரட்டாசி அல்லது தை அமாவாசைகளில் உயர்நீத்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை மகிழ்விப்பது தடைகளை நிவர்த்தி செய்வதற்கு உதவுகிறது.

2. ஆவணி மாதத்தில் அரச மரக்கன்று ஒன்றை வாங்கி கோவில்களில் நடுவதும் சிறந்த பலனை அளிக்கின்றது.

3. உணவு உடை தேவை இருப்பவர்களுக்கு அவற்றை தானமாக வழங்கியும் பித்ரு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறலாம்.

தோஷ நிவர்த்தி ஸ்தலங்கள்

1. ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்து கடலில் நீராடி நம் முன்னோர்களிடம் இருந்து ஆசியை பெறலாம்.

2. திருப்புல்லாணி சென்று பித்ருதோஷ நிவர்த்தி ஹோமம் செய்து பித்ரு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற்றுக்கொள்ளலாம்

3. திருவெண்காடு சென்று பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் செய்து முன்னோர்கள் ஆசியை பெறலாம்.

4.ஸ்ரீ வாஞ்சியம் சென்றுபித்ருதோஷ நிவர்த்தி ஹோமம் செய்து பித்ரு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற்றுக்கொள்ளலாம்.

5. ஈரோட்டில் உள்ள பவானி கூடுதுறையில் சென்று பித்ருதோஷ நிவர்த்தி ஹோமம் செய்து பித்ரு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெற்றுக்கொள்ளலாம்.

பித்ருக்களின் சாபம் நீங்குவதற்கு பரிகாரங்கள் பூஜைகள் செய்து நிவர்த்தி செய்து கொண்டு திருமணத்தடை , குழந்தையின்மை மற்றும் குழந்தை பேரில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம் குடும்பத்தில் மகிழ்ச்சி ,கணவன் மனைவி ஒற்றுமை , உடல் ஆரோக்கியம் போன்ற அனைத்திற்கும் பித்ரு தோஷ நிவாரணம் செய்து நன்மையடைந்து கொள்ளலாம்.