Home ஆன்மிகம் மகாசிவராத்திரியில் இந்த செடியை வீட்டில் நட்டு வைத்தால் வேண்டிய வரங்களை தரும் சிவப்பெருமான்!

மகாசிவராத்திரியில் இந்த செடியை வீட்டில் நட்டு வைத்தால் வேண்டிய வரங்களை தரும் சிவப்பெருமான்!

பொதுவாக இந்துக்கள் மகாசிவராத்திரி அன்று சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபடுவதற்கு ஒரு மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது. சிவராத்திரி என்று சிவபெருமானின் வழிபட்டு விரதம் இருந்தால் நாம் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக நம் வீட்டில் சில செடிகளை நட்டு வைப்பதால் நம் வீட்டில் எதிர்மறை ஆற்றலும் நம் மனதில் எதிர்மறை சிந்தனை கலந்திருந்தால் அது மறைந்து நேர்மறை ஆற்றல் நம் வீட்டில் இருக்கும். அந்த வகையில் சிவபெருமானுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரி என்று வீட்டில் ஒரு சில மரங்களை நட்டு வைத்தால் நம் வீட்டில் நேர்மறை ஆற்றலும் செல்வமும் செழிப்பும் பெருகி காணப்படும் அந்த மரங்களைப் பற்றியும் சிவராத்திரியின் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்

2024 வது வருடம் மகா சிவராத்திரி ஆனது மார்ச் மாதம் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. அனைத்து வருடத்திலும் மாசி மாதம் கொண்டாட கூடிய இந்த மகா சிவராத்திரி எல்லா இடங்களிலுமே மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். சிவபெருமானுடைய அருளை முழுமையாக பெறுவதற்கு மகா சிவராத்திரி என்று விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பிற்குரிய ஒன்றாகும். மகா சிவராத்திரி என்றுதான் சிவபெருமானுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நாளன்று நாம் விரதம் இருந்து சிவபெருமானிடமும் பார்வதி தேவியிடமும் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மகாசிவராத்திரி என்று நம் வீட்டில் வைக்க வேண்டிய சில மரங்கள்

நம் வீட்டில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்து அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து வீடும் முழுவதும் நிம்மதியும் செல்வமும் பெறுக மகாசிவராத்திரி என்று சிவபெருமானின் அருளை முழுமையாக பெறுவதற்கும் வீட்டில் எதிர்மறையாற்றலை போக்கக்கூடிய ஒரு சில மரங்களை நட்டு வையுங்கள். அப்படி நாம் வைக்கும் போது எதிர்மறை ஆற்றல் அனைத்தும் அழிந்து நேர்மறை ஆற்றல் நம் வீட்டில் பெருகும். அது எந்தெந்த செடிகள் என்று பார்க்கலாம்

வன்னி மரம்

இந்த வன்னி மரம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. பொதுவாக நாம் சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபடும் பொழுது வன்னி மரத்தின் இலைகளை பூஜையின் போது பயன்படுத்தினால் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்வார்கள். எனவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த இந்த வன்னி மரத்தை மகா சிவராத்திரி அன்று நம் வீட்டில் நட்டு வைக்க நம் வீட்டில் செல்வம் பெருகி எதிர்மறை ஆற்றலும் அழிந்துவிடும்

ஊமத்தம் செடி

பொதுவாக வீட்டில் முள் செடிகளை வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். ஆனால் தாதுரா என்று அழைக்கப்படும் இந்த உம்மத்தின் செடியை நம் வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதிலும் மகா சிவராத்திரி என்று சிவபெருமானை முழுவதுமாக மனதில் நினைத்துக் கொண்டு இந்த ஊமத்தம் செடியை நம் வீட்டில் நட்டு வைத்தால் நம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து எதிர்மறை ஆற்றலும் அழிந்து நம் வீட்டில் செல்வம் பெருகி நம் வீட்டில் நிம்மதியும் கிடைக்கும். எனவே சிவராத்திரி என்று இந்த ஊமத்தம் செடியை வீட்டில் நட்டு வைப்பது மிகவும் சிறப்பானது

-விளம்பரம்-

வில்வமரம்

வில்வ மரத்தின் இலைகளை சிவபெருமானை வழிபடும் போது அவர் மேல் வைத்து பூஜை செய்து வழிபட்டால் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும். நாம் வேண்டியது எல்லாம் சிவபெருமான் நமக்கு வழங்குவார் என்று நம்பப்படுகிறது. எனவே சிவபெருமானின் அருளை முழுமையாக பெறுவதற்கு அவருக்கு பிடித்த வில்வ மரத்தை மகா சிவராத்திரி என்று வீட்டில் நட்டு வைக்கலாம். ஜோதிட சாஸ்திரத்தின் படி வீட்டில் வடக்கு அல்லது தெற்கு திசைகளிலேயே இந்த வில்வ மரத்தை நட்டு வைக்க வேண்டும். அப்படி நட்டு வைத்தால் சிவபெருமான் மனம் குளிர்ந்து நாம் வேண்டியது எல்லாம் நமக்கு தருவார் வீட்டிலும் நிம்மதி இருக்கும்.