பொதுவாகவே ஆரோக்கியமான உணவுகள் என்றால் பலருக்கும் பிடிப்பதில்லை. ஏனென்றால் இவற்றின் சுவை நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மிகவும் அருமையாக இருப்பதில்லை. பாகற்காய், கத்தரிக்காய் மற்றும் சில காய்கறிகளையும் எவரும் விருப்பமாக சாப்பிடுவதில்லை. அதேபோல் கீரை வகைகளையும் ஒதுக்கி வைக்கிறனர். அதிலும் முக்கியமாக முருங்கைக்கீரையை பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் கீரைகளிலேயே முருங்கைக் கீரையில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்றவை அதிகமாக இருக்கிறது.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து. முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன.வாரத்திற்கு ஒரு முறை முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் போதும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு அதிகம் தேவைப்படும்
இந்த முருங்கைக்கீரையை அனைவரும் விருப்பமாக சாப்பிட இந்தக் கடலைக் பொடி ஒன்று இருந்தால் போதும். இந்த கடலை போடி சேர்த்து செய்வதால் முருங்கையின் மணம் அடிதிதமாக இருக்கும். வாருங்கள் இந்த கடலைக்பொடி முருங்கைக்கீரையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பொடி முருங்கைக் கீரை | Podi Drumstick Leaves stir fry
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 ஸ்பூன் தனியா
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 6 வரமிளகாய்
- 1 கப் வறுத்த வேர்க்கடலை
- 10 சின்ன வெங்காயம்
- 3 கைப்பிடி முருங்கைக்கீரை
- 3 ஸ்பூன் மஞ்சள்தூள்
- 1/4 ஸ்பூன் உப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
செய்முறை
- முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒருகடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் தனியா, சீரகம் சேர்த்துவறுக்க வேண்டும். பிறகு இதனுடன் 6 வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- பின்னர் இவற்றுடன் ஒரு கப் வேர்க்கடலை சேர்த்து5 நிமிடத்திற்கு வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாக ஆற வைக்கவேண்டும். பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாகஅரைத்து கொள்ள வேண்டும். பின்னர் முருங்கைக்கீரையின் இலையை மட்டும் தனியாக கிள்ளி வைக்கவேண்டும். பிறகு கீரையை தண்ணீரில் இரண்டு, மூன்று முறை அலசி வைக்க வேண்டும்.
- பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாகநறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து,கடாய் சூடானதும் அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும்அதில் கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகவறுக்க வேண்டும்.
- பிறகு நறுக்கி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.இவற்றுடன் உப்பு சேர்த்து கிளறி விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கீரையை வேகவைக்கவேண்டும்.
- தண்ணீர் முழுவதும் வற்றி கீரை நன்றாக வெந்ததும்இதனுடன் அரைத்து வைத்துள்ள கடலை பொடியை சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான்சூப்பரான முருங்கைக்கீரை பொரியல் தயாராகிவிட்டது.
- சுட சுட சாதத்துடன் சேர்த்து இந்த முருங்கைகீரை பொரியலை சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும்.