இரவு டிபனுக்கு உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி இப்படி தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 ரொட்டி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

இந்தியாவில் செய்யப்படும் சப்பாத்தி, ரொட்டிபோன்ற ஒரு உணவு வகை தான் இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி. இது அதை விட மிருதுவாக இருக்கும். இந்த தந்தூரி ,அலு ப்ரோட்டா போன்று சாப்பிட மிகவும் நன்றாகவே இருக்கும். இப்போது உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலாம்.

-விளம்பரம்-

உருளை கோதுமை வைத்து நாவிற்கு சுவை தரும் ஒருஉருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே பக்குவமாக அருமையான உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி சுட்டு பாருங்க அருமையா வரும்.

- Advertisement -

உங்க இஷ்டம் போல காரச்சட்னி, குருமா, எதை வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளுங்கள். இதில் சில மசாலா பொருட்களையும் சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி செய்ய போறோம். வாங்க இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாமும் தெரிந்துகொள்வோம்.

Print
No ratings yet

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி| Potato Cheese Roti Recipe In Tamil

உருளைக்கிழங்கு சீஸ் பாலக்ரொட்டியை நாம் வீட்டில் சுலபமாக செய்யலாம். உருளை கோதுமை வைத்து நாவிற்கு சுவை தரும்ஒருஉருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமாக ஐந்தே நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைவைத்தே பக்குவமாக அருமையான உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி சுட்டு பாருங்க அருமையாவரும்.  உங்க இஷ்டம் போல காரச்சட்னி, குருமா,எதை வேண்டுமென்றாலும் தொட்டுக்கொள்ள வைத்துக் கொள்ளுங்கள். இதில் சில மசாலா பொருட்களையும்சேர்த்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி செய்ய போறோம்.வாங்க இந்த உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டியை நாமும் தெரிந்துகொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Potato Cheese palak Roti
Yield: 4
Calories: 234kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 உருளைக்கிழங்கு வேகவைத்து உரித்து மசித்தது
  • 1 கப் பாலக்கீரை வேகவைத்து அரைத்தது
  • 3 கப் கோதுமை மாவு
  • துருவிய சீஸ் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 2 நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை
  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • கோதுமை மாவு, பாலக்கீரை விழுது, உப்பு, மஞ்சள் தூள், சீரகத் தூள், தயிர், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அனைத்தும் சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து வைக்கவும்.
  • பிசைந்த மாவை 10-12 சரிசம அளவு உருண்டைகளாக பிரித்து, வட்டமான சப்பாத்திகளாக இட்டு வைக்கவும்.
  • வேகவைத்த உருளைக்கிழங்குடன். உப்பு, பச்சைமிளகாய், மல்லித்தழை, துருவிய சீஸ் ஒன்றாக சேர்த்து கலந்து, பரத்திய சப்பாத்தியின் மேல் 11/2 டேபிள்ஸ்பூன் அளவு கலவையை நடுவில் வைக்கவும்.
  • சப்பாத்தியின் ஒரங்களை நடுபாகத்துக்கு ஒன்று சேர்த்து உருளைக்கிழங்கு கலவை மூடும் அளவிற்கு கொண்டு வந்து, மேலேயுள்ள மீதி சப்பாத்தி மாவை கிள்ளி எடுக்கவும்.
  • உருண்டையாக உருட்டி கோதுமை மாவு தூவி வட்டமாக சப்பாத்திகளாக, உருளைக்கிழங்கு கலவை வெளியே வராத அளவுக்கு பரத்தி எடுக்கவும்.
  • சப்பாத்தி கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்தவுடன் சூடாக தயிர், ஊறுகாய் அல்லது காய்கறி குழம்புடன் பரிமாறவும்.

Nutrition

Serving: 300g | Calories: 234kcal | Carbohydrates: 34.2g | Monounsaturated Fat: 0.4g | Cholesterol: 0.6mg | Sodium: 1094mg | Potassium: 2.3mg | Fiber: 1.9g | Calcium: 12.3mg