காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு சுக்கா இனி இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

- Advertisement -

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களை இந்த உலகில் பார்க்கவே முடியாது. எல்லோருக்கும் பிடித்தமான உணவு பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. பொதுவாக பலருக்கு பிடித்த வறுவல் தான் உருளைக்கிழங்கு வறுவல். எல்லாருமே ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவலை தான் செய்வார்கள். இருந்தாலும் உருளைக்கிழங்கை வித்தியாசமாக செய்து சாப்பிடு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் உங்களுக்கு செய்ய தெரியாது என்றாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இன்றைய பதிவில் உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் சுக்கா செய்யும் முறையைப் பற்றி தான் பார்க்க போகிறோம். உருளைக்கிழங்கில் நாம் எந்த விதமான உணவுகள் செய்தாலும் மிகவும் ருசியாக இருக்கும்.

-விளம்பரம்-

உருளைக்கிழங்கு பயன்படுத்தி உருளைக்கிழங்கு கூட்டு ,உருளைக்கிழங்கு குருமா, உருளைக்கிழங்கு ரோல், உருளைக்கிழங்கு ரோஸ்ட், உருளைக்கிழங்கு கட்லெட், பூரி கிழங்கு, பால்கறி, பிரெஞ்ச் ப்ரைஸ் என எக்கச்சக்கமான ஸ்னாக்ஸ் ரெசிபிஸும், குழம்பு வகைகளும் கூட்டு வகைகளும் நம்மால் செய்ய முடியும் எது செய்தாலும் மிகவும் ருசியாகவே இருக்கும். ஆனால் இது அனைத்தையும் விட உருளைக்கிழங்கை பயன்படுத்தி ஒரு சிம்பிளான சுக்கா. இதை செய்து அதனை ரசம் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் பிரியாணி கூட தோற்றுவிடும் அந்த அளவிற்கு மிகவும் ருசியாக இருக்கும். மதிய வேளையில் உணவுக்கு ஏதேனும் பொரியல், வறுவல் இல்லையென்றால் சிலருக்கு சாப்பாடே இறங்காது. அவ்வாறு வேகமாக செய்ய முடியாமல் இருப்பவர்கள், வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை வைத்து ஒரு சுக்காவை 10-15 நிமிடத்தில் செய்து முடிக்கலாம். அதனால் ஒரு முறை இந்த மாறி உருளைக்கிழங்கு சுக்கா செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த சுக்கா தயிர் சாதம், புளிசாதம், சுடசுட சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -
Print
4.50 from 2 votes

உருளைக்கிழங்கு சுக்கா | Potato Chukka Recipe In Tamil

உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களை இந்த உலகில் பார்க்கவே முடியாது. எல்லோருக்கும் பிடித்தமான உணவு பொருட்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. பொதுவாக பலருக்கு பிடித்த வறுவல் தான் உருளைக்கிழங்கு வறுவல். எல்லாருமே ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவலை தான் செய்வார்கள். இருந்தாலும் உருளைக்கிழங்கை வித்தியாசமாக செய்து சாப்பிடு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் உங்களுக்கு செய்ய தெரியாது என்றாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. இன்றைய பதிவில் உருளைக்கிழங்கை வித்தியாசமான முறையில் சுக்கா செய்யும் முறையைப் பற்றி தான் பார்க்க போகிறோம். மதிய வேளையில் உணவுக்கு ஏதேனும் பொரியல், வறுவல் இல்லையென்றால் சிலருக்கு சாப்பாடே இறங்காது. அவ்வாறு வேகமாக செய்ய முடியாமல் இருப்பவர்கள், வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை வைத்து ஒரு சுக்காவை 10-15 நிமிடத்தில் செய்து முடிக்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Potato Chukka
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி உருளைக்கிழங்கு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் மிளகு
  • 2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 8 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளை கிழங்கை நன்கு சுத்தம் செய்து, பெரிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு ஆறியதும் இதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மிளகு, உளுந்தம் பருப்பு, மிளகாய், சோம்பு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள பொடி‌, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து உருளைக்கிழங்கு உடையாமல் ஒன்று சேர நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் வித்தியாசமான, சுவையான உருளைக்கிழங்கு சுக்கா தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு சிறந்த சைட்டிஷ் ஆகும்.

Nutrition

Serving: 250g | Calories: 164kcal | Carbohydrates: 37g | Protein: 4.6g | Fat: 0.2g | Potassium: 620mg | Fiber: 4g | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 2.1mg

இதனையும் படியுங்கள் : சூப்பராக காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு தவா வறுவல் ஒரு தரம் இப்படி மட்டும் செய்து பாருங்க!