எவ்வளவு செய்தாலும் காலியாகும் உருளைக்கிழங்கு காரக் கறி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

- Advertisement -

காய்கறிகளில் அனைவருக்கும் பிடித்த காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். இந்த உருளைக்கிழங்கு வைத்து எந்த மாதிரியான உணவை செய்து கொடுத்தாலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்புகாரர்களுக்கும் இது மிகவும் நல்லது. இந்த உருளைக்கிழங்கு நாம் பல வகையில் செய்வோம்.

-விளம்பரம்-

அதையும் இதே போல உருளைக்கிழங்கு காரக் கறி செய்து கொடுத்தால் போதும் வேறு எதையுமே கேட்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி வெறும் தயிர் சாதம், ரசம் சாதம் செய்து கறி சுவையில் சூப்பரான இந்த உருளைக்கிழங்கு காரக் கறி கொடுத்தால் கூட அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். இந்த சுவையான உருளைக்கிழங்கு காரக் கறி வறுவல்  குறிப்பு இதோ உங்களுக்காக.இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் உருளைக் கிழங்குகை வைத்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு காரக் கறி எப்படி செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.

- Advertisement -
Print
4.67 from 3 votes

உருளைக்கிழங்கு காரக் கறி | Potato Spicy Curry Recipe In Tamil

உருளைக்கிழங்கு காரக் கறி செய்து கொடுத்தால் போதும் வேறு எதையுமே கேட்க மாட்டார்கள். அதுமட்டுமின்றிவெறும் தயிர் சாதம், ரசம் சாதம் செய்து கறி சுவையில் சூப்பரான இந்த உருளைக்கிழங்கு காரக் கறி கொடுத்தால் கூட அடம் பிடிக்காமல்சாப்பிட்டு விடுவார்கள். இந்த சுவையான உருளைக்கிழங்கு காரக் கறி வறுவல் குறிப்பு இதோ உங்களுக்காக.இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் உருளைக் கிழங்குகை வைத்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு காரக் கறி எப்படி செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Potata Spicy Curry
Yield: 4
Calories: 158kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 4 பல் பூண்டு
  • 1 தேவையானஅளவு மிளகாய் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்

செய்முறை

  • தேவையான வற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • பூண்டை நசுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • பிறகு உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
     
  • சுவையான உருளைக்கிழங்கு காரக் கறி தயார்.

Nutrition

Calories: 158kcal | Carbohydrates: 24g | Protein: 12g | Fat: 1g | Cholesterol: 8mg | Sodium: 11.3mg | Potassium: 214mg | Fiber: 9g | Iron: 2mg