Advertisement
ஆன்மிகம்

ஆனி பௌர்ணமி தின சிவ வழிபட்டால் லட்சுமி அன்னையின் பூரணாருள் கிடைக்கும்!

Advertisement

பொதுவாகவே பெளர்ணமியில் சிவ பெருமானை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். அதுவும் ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமி அதிக வாய்ந்தது. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் பெளர்ணமி இணைந்து வருவதால் ஆனி மாத பெளர்ணமி நாள் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. இந்த அற்புதமான வேளையில், சிவ வழிபாடு செய்வதும் சிவ புராணம் படித்து வேண்டிக் கொள்வதும் மிகுந்த பலம் தரும். இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியது. முழு நிலவு நாளான பௌர்ணமி தொடர்பான விவரங்களும், அன்று செய்யும் வழிபாடு பற்றியும் இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

பௌர்ணமி தினத்தின் மகத்துவம்

பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி மற்றும் சிவ வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். ஆனி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை, ஐப்பசி முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.

Advertisement

ஆனி மாத பௌர்ணமியின் சிறப்புகள்

தமிழ் மாதத்தில் வரக்கூடிய அனைத்து பௌர்ணமிகளும் சிறப்பான பௌர்ணமி தான். நம்முடைய வினைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வழிபாடு செய்து வந்தால் மேன்மை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆதலால் இந்ந மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று விரதம் இருந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், காரிய வெற்றி கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சுபமாக முடியும். நைவேத்தியமாக உளுந்தம் பருப்பு சாதமும், முக்கனிகளையும் படைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். இந்நாளில் சாவித்திரி பூஜை செய்வது மாங்கல்ய பலம் அதிகரிக்க செய்யும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை உண்டாகும் என்பது உண்மை. அதுமட்டுமல்லாமல் இந்த மாதம் பௌர்ணமி வெள்ளிக்கிழமை வருவதால் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தடைப்பட்ட வீடு கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள்.

பௌர்ணமி சிவ வழிபாடு

பொதுவாக மனிதனின் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்வது பூஜைகளும், விரத முறைகளும் தான். அந்த வகையில் பௌர்ணமி தினத்திலும், அமாவாசை தினத்திலும் மேற்கொள்ளும் விரதம் உடனடி பலன் தரும் என நம்பப்படுகிறது. பௌர்ணமி போன்ற

Advertisement
சந்திர பலம் நிறைந்த நாளில் கடல் நீர் பொங்கி எழும். இந்த நாளில் நாம் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் அலைபாயும் நம்‌ மனதில் அமைதி நிலவும். அப்படிப்பட்ட நாட்களில் ஓர் நாள் தான் ஆனி பௌர்ணமி. பெளர்ணமி வழிபாட்டை பல காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். சர்வம் சிவமயம் என்று கூறும் சைவ மதத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆனி மாதம் செய்யப்படும் சிவ அபிஷேகமானது
Advertisement
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனி அபிஷேகத்தினால் மனம் குளிரும் சிவ பெருமான் எல்லாவித நன்மைகளையும் கொடுப்பார். அபிஷேகங்களில் சிறப்பானது எது என்று கேட்டால் பாலாபிஷேகம் என்று சொல்வார்கள். பாலாபிஷேகம் சிவனுக்கு பிடித்தமானது என்றாலும், தேனாபிஷேகம், விபூதி அபிஷேகம், பஞ்சாமிருத அபிஷேகம் என பல்வேறு வகையான அபிஷேகங்களும் இந்த நாளில் செய்து சிவ பெருமானின் அருளை பெறலாம். இந்த நாளில் சிவ வழிபாடு மேற்கொள்வதால் சிவனின் அருளை மட்டும் இல்லாமல் அன்னை லட்சுமி தேவியின் அருளையும் பெறலாம்.

ஆனி பௌர்ணமி தின வழிபாட்டின் நன்மைகள்

பெளர்ணமி தினத்தில் சந்திரன் தனது பிரகாச ஒளியை பரிபூரணமாக வழங்குவதைப் போல, பெளர்ணமி விரத வழிபாடு பரிபூரண பலனைத் தரவல்லது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. ஆனி மாத பவுர்ணமி அன்று விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும். விரதமிருப்பவர்கள் ஆனி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். இந்த நாளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடேரும். ஆனி மாத பௌர்ணமி அன்று மா, பலா, வாழை உட்பட கனிகளை படைத்து இறைவனை வணங்குவது சிறப்பு. தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி வீட்டில் சுபகாரியஙக்ள் நடைபெற பெளர்ணமி விரதம் கடைப்பிடிக்கலாம். இந்த நாளில் சிவ அபிஷேகம் செய்வது, வீட்டில் நிம்மதியையும் பண வரத்தையும் அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : சதுரகிரி மலை ஆனி மாத பௌர்ணமி வழிபாடு,4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 ஜூலை 2024!

மேஷம் இன்று உங்கள் உடன்பிறப்புகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உங்களுக்கு ஏமாற்றம் தரும் நாளாக இருக்கும். உங்கள் இல்லற வாழ்வில்…

2 மணி நேரங்கள் ago

கருங்காலி மாலை அணிவதன் பலன்கள்

கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. சக்தி வாய்ந்த இந்த மாலையை பலர் அணிந்திருந்தாலும், சமீபத்தில் லோகேஷ்…

11 மணி நேரங்கள் ago

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு லட்டு பிடிக்குமா ? அப்படியானால் இனி வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் லட்டு செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!!

இனிப்பு பிரியர்கள் அனைவருக்கும் லட்டு பிடிக்கும். பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன.…

19 மணி நேரங்கள் ago

சத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை ஒரு இப்படி செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

21 மணி நேரங்கள் ago

ஜூலை மாத ராசிபலன் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதம் பல சவால்களை எதிர் கொள்வீர்கள் மற்றும் கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு பல வழிகளில்…

1 நாள் ago

சுவையான மற்றும் சத்தான சேனைக்கிழங்கு தவா ரோஸ்ட் இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!!

கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான…

2 நாட்கள் ago